வரலாற்று மூலாதாரங்கள் படி அஙராதபுர இராசதானியை ஆண்ட முதல் மன்னன் பண்டுகாபயன் ஆவான்.
முறையான ஆட்சியை நிறுவிய முதல் மன்னன்.
பண்டுகாபயன் பிராந்திய ஆட்சியாளர்கள்(மாமனார்)பலருடன் சண்டையிட்டு அப்பிராந்தியத்தினை கைப்பற்றி ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தான்.
தனது ஆட்சியின்மத்திய நிலையமாக அனுராதபுரத்தை தெரிவு செய்து அதனை தலைநகரமாகக் கட்டியெழுப்பினான்.
தனது பத்தாவது ஆட்சி வருடத்தில் கிராமகளுக்கு எல்லைகள் வகுத்தான்.
தனது ஆட்சியின் மத்திய நிலையமாக அநுராதபுரத்தை தெரிவு செய்தான்.
முதற்தடவையாக நகர நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொண்டான்.
இலங்கை வரலாற்றில் குறிப்பிடப்படும் முதலாவது குளமான அபயவாவியை அமைத்தான்.
முதன் முறையாக வைத்தியசாலைகளை அமைத்தான்.
நகரங்களை நிர்வகிக்க நகரகுத்திகன் என்ற அலுவரை நியமித்தான்.
பண்புள்ள சீரான சமூத்தை கட்டியெழுப்பும் வகையில் ஆலயங்களை அமைத்தான்.
70 வருடங்கள் சிறப்பாக நாட்டை ஆட்சி செய்தான்.
0 Comments