தமிழ் கவிதை அக்கா (Tamil Kavithai Akka)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை அக்கா

தமிழ் கவிதை அக்கா 

வானின் நட்சத்திரங்களை எண்ணி விடலாம்

ஆனால் அவள் அன்பின் அளவை அளவிட இயலாது....

தாகம் வருகையில் குவளை நீர் எப்படியோ

அதுபோல நான் தயங்கி நிற்கும் போது தோள் சாயும் தாயும் அவளே....


அழகை பற்றி கூற ஆயிரம் சொற்கள் உண்டு

ஆனால் அவள் அன்பினை கூற வார்த்தையில்லை....

அவள் என்னை தட்டிக் கேட்கும் அந்த நொடி

கோபம் எனக்கு தலைக்கு ஏறியதடி.....


சபித்து சாபம் விட்டேன் அன்று உனக்கு

அக்கண்டிப்பே இன்று துணை எனக்கு....

அழுகும் நேரம் சாய்த்தாய் உன் மடியில்

என் உலகை மறந்தேன் அந்த நொடியில்.....


அணைத்தாய் நீயே முதல் தாயாய்

அடித்தாய் கண்டேன் உனை இன்னொரு தந்தையாய்.....

இவளே என்னுயிரின் மூச்சு காற்றோட்டம்

இவளுக்காகவே உண்டு என் வாழ்நாள் உயிரோட்டம்.....


கண்டேன் என் முதல் காதல் தேவதையை

இவளிடம் மட்டுமே சொல்ல தோன்றுகிறது என் வேதனையை....

என் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும்

இவளின் பெயரை மட்டுமே உரக்க சொல்லும்......


உலகின் ஆயிரம் சொந்தம் வந்தாலும்

இவள் அன்பை மிஞ்சாது எந்நாளும்....

என் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவள்

எனக்காக எவரிடமும் துணிந்து நின்றவள்.....


அழுதேன் நீ மணமகளாய் பிரிந்து சென்றபோது

கர்வம் கொண்டேன் தாய்மாமன் ஆகி நின்றபோது.....

பிறக்கும் போது மட்டுமே நீ என் சகோதரி 

இறக்கும் வரையில் நீயே என் தாய் அதை மறவாதடி.....


என் உலகில் என்றும் உனக்கென தனியிடம் உண்டு

உலகை வெல்வேன் உன் துணைக்கொண்டு....

உன்னிடம் பேச சொல்லும் அலைபேசி எண்கள்

உன் நினைவின்றி உறங்காது எண்ணிரு கண்கள்......


இன்னும் அதிகம் சொல்ல முயல்கிறேன் நானே

இந்த மகிழ்ச்சி; மனமலர்ச்சி எல்லாம் உன்னால் தானே.......

நன்றி - M.Premkumar

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments