சோழர் காலத்தில் அதிகமாக காவியங்கள் தோற்றம் பெற்றமைக்கான காரணங்கள் (Chola Period Epics)

Chola Period Epics

சோழர் காலத்தில் தோன்றிய காப்பியங்கள்

சோழ மன்னர்களின் உன்னத ஆட்சி இடம்பெற்ற காலம் என சிறப்பிக்கப் படும் கி.பிடிம் நூற்றாண்டு கி.பி 14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட சோழர்காலத்தில் கதை உரைத்துச் செல்லும் பண்புடன் கூடியவையா - கவும், காவிய இலக்கணங்கள் யாவும் பொருந்தியவையாகவும், அறம். பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள் பற்றி விளக்குவனவாகவும் காவியங்கள் விளங்குவதுடன் அக்காவியங்கள் பெருவாரியாக படைக்க - பட்டதால் காவிய காலம், காவிய உற்பத்திக்காலம் எனவும் அழைக்கப்படு கின்ற சோழர்காலத்தில் மிகுதியான காவியங்கள் படைக்கப்பட்டமைக் தாள காரணங்களை பின்வருமாறு. எடுத்துரைக்கலாம்.

காவியங்களில் தன்னிகரில்லாத தலைவனின் வளநாடு சம்பந்தமான வர்ணனைகள் இடம்பெற வேண்டும். இத்தகைய வர்ணனைகளையும் படைப்பதற்கு சோழர்கால நாட்டு நகர வர்ணனைகளை புலவர்கள் தமது காவியங்கள் காட்சி மூலமாகக் கொண்டு காவியங்களைப் படைத்தனர். சோழர்காலத்தில் படைக்கப்பட்ட கம்பராமாயணத்தின் "காவிரி நாடென்ன களனி நாடே எனும் வரிகள் சோழ நாட்டை வயல்கள் கழந்த செல்வம் செழிக்கும் நாடாகப் பாடியிருப்பதைக் காணலாம். மேலும் *பூவிரி பொலன் கழல், பொரு இல் தலையான என சோழநாடு போன்ற வயல் வளமிக்க சோலநாடு என வர்ணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

காவியங்களில் வர்ணனைகள் தன்னிகரில்லாத தலைவனின் வளநாடு சம்பந்தமான இடம்பெற வேண்டும். இத்தகைய வர்ணனைகளையும் படைப்பதற்கு சோழர்கால நாட்டு நகர வர்ணனைகளை புலவர்கள் தமது காவியங்கள் காட்சி மூலமாகக் கொண்டு காவியங்களைப் படைத்தனர்.

சோழர்காலத்தில் படைக்கப்பட்ட கம்பராமாயணத்தின் "காவிரி நாடென்ன களனி நாடே" எனும் வரிகள் சோழ நாட்டை வயல்கள் சூழந்த செல்வம் செழிக்கும் நாடாகப் பாடியிருப்பதைக் காணலாம். மேலும் பூவிரி பொலன் கழல், பொரு இல் தலையான ரூ என சோழநாடு போன்ற வயல் வளமிக்க கோசலநாடு என வர்ணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

காவியம் என்பது ஆர அமர்ந்து சிந்தித்து நிதானித்து படைக்கப்பட்ட வேண்டிய ஓர் காவியங்களை இலக்கியப் படைப்பாகும். சோழர்காலத்தில் புலவர்கள் படைப்பதற்கு சோழர்கால வள்ளலகளும் மன்னர்களும் பலவேறு உதவிகளை நலகினர். இதற்கு உதவிகளைப் பெற்றுக் கொண்ட புலவர்கள் காவியங்களைப் பெருவாரியாக தோற்றுவிக்க முடிந்தது. சான்றாக கம்பருக்கு ஏரு பிரித்துக் கொடுக்க சடையப்ப வள்ளல், ஒருவனை அமர்த்தியதாகக் கூறப்படுகின்றது.

சோழர் காலம் காவிய காலம்

காவியங்கள் இறையியலும் உலகியலும் நிறைந்ததொரு இலக்கியப் படைப்பாகும். சோழர்காலத்துக்கு முன்னர் தமிழ் சமகத்தில் இறையியலும் உலகியலும் பெருமளவு இணைந்து காணப்படவில்லை. கனால் சோழர் காலத்தில் உலகியலும் இறையியலும் இணைந்து காணப்பட்டதால் பல காவியங்கள் தோற்றம் பெற்றன.

சோழர் காலத்தில் வடமொழியில் அமைந்த காவியங்களுக்கு இலக்கணம் கூறிய க்ாவிய தற்று என்ற அணி இலக்கண நூல் தமிழில் தண்டியலங்காரம் என்ற பெயரில் ஆக்கப்பட்டது.இவ் அணி இலக்கண நூலைப் பின்பற்றி சோழர் காலத்தில் காவியப் புலவர்கள் பல காவியங்களை படைத்தனர்:

காவியங்களைப் படைப்பதற்கு பல்துறை அறிவு அவசியம். இத்தகைய பலதுறை அறிவுகளைப் பெறக்கூடிய தமிழ் சமுகமாக சோழர்கால சமுகம் காணப்பட்டது. இதனைப் பயன்படுத்திய சோழரிகாலம் புலவர்கள் பெருமளவு காவியங்களைப் படைத்தனர். சான்றாக திருந்தக்கதேவர் சீவக சிந்தாமணியின் சீவகனுக்கு பாம்பு கடிக்கும் சந்தர்ப்பத்தில் பாம்பின் வகைகளையும் அவற்றின் விஷத்தன்மை பதிந்து மூலிகைகள் என்பற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

சோழரகாலத்தில் காவியங்களை இரசித்து சுவைக்கக்கூடிய ஓர் உயர்வர்க்கத்தினர் சகேத்தில் காணப்பட்டனர். இவர்களின் 'இரசணையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உருவாகியதாக, காவியங்கள் படைக்கப்பட்டன. சோழர்கால சமூகம் தந்து, வட்மொடி இலக்கியங்களை அறிவிலும் இலக்கியங்களை, இரசிப்பதிலும். மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகக் காணப்பட்டனர் இத்தன்மையாலே சீவக சிந்தாமணி போன்ற காவிய இலக்கணங்கள் யாவும் அமையப் பெற்றன. இலக்கியங்கள் சோழங்காலத்தில் படைக்கப்பட்டன:

சோழர் காலத்தில் காவியங்களின் தோற்றத்திற்கு பல்லவர்கால இலக்கியங் களும் அடித்தளமாக அமைந்திருந்ததைக் காணமுடிகின்றது. பக்திப் புலவர்கள் பகுதிப் பிரசாரத்திற்கு கையாண்ட நீண்ட கதைகளை கொண்டு சோழர் கால புலவர்கள் காவியங்களை படைத்தமையைக் காணமுடிகின்றது. பல்லவர் . காலத்தில் தேவாரங்களில் கையாளப்பட்ட சைவசமய கருத்துக்கள் சோழர் காலத்தில் பெரிய புராணம், கந்தபுராணம் முதலிய பேரிலக்கியங்களின் தோற்றத்திற்கும் துக்கள் ஆழ்வார்களின் பாடல்களில் காணப்பட்ட இதிகாச கருத் சோழர்காலத்தில் கம்பராமாயணத்தின் தோற்றத்திற்கும் காரணமாக அமைவதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

காரைக்கால் அம்மையார் அறிமுகப்படுத்திய பத்தியுணர்ச்சியை பாடுவதற்கு ஏற்ற விருத்தப்பா மாப்பு பல்லவறகால புலவர்களால் பக்தி இலக்கியங்களை படைப்பதற்கு மிதமாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த யாப்பைக் காவியங்களை படைப்பதற்கு சோழர்கால புலவர்கள் மைண்டு இருந்தமையைக் காண்டுடிகிறது. விடுத்தப்பாவானது சீவகசிந்தாமணி தெலிய பெருங்காப்பியத்திலும், கம்பராமா யணம், பெரியபுராணம் முதலிய பேரிலக்கியங்களிலும் கலிங்கத்துபரணி முதலிய சிற்றிலக்கிமங்களிலும் விருந்தப்பா யாப்பின் பிரயோகத்தை காண முடிகிறது.

பல்லவர்காலததில் கொங்குவெளிர எழுதிய உதயனின் கதை / மாக்கதை / பெருங்கதை காவியப்பண்புகளை கொண்ட இலக்கியமாகக் காணப்பட்டது. தமிழில் எழுந்த காப்பியங்களுள் வட இந்திய பகுதிகளை களமாகத் கொண்டு தமிழ்ச்சாயலோடு படைக்கப்பட்ட வதல் தமிழ் காப்பியம் உதயனின் கதையாகும். எனவே பல்லவர்காலத்தில் பாடப்பட்ட சமணசயம் சார்பான உதமனின் பெருமை பேசுகிற மாக்கதை அடிப்படையாகக் கொண்டு சோழாகால காவியங்கள் படைக்கப்பட்டதால் அது மிகையாகாது.

👉மேலும் சோழர் காலத்தில் அரசியல் நிலை, சமூக நிலை மற்றும் இலக்கியங்கள்

👉இராசேந்திர சோழன் வரலாறு - கி.பி. 1012-1044 - History of Rajendra Chola




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments