சோழர் காலம் Chola period
பல்லவர் காலம் கி.பி 9ம் நூற்றாண்டில் சோழர்களால் நிறைவு செய்யப்பட்டதிலிருந்து கி.பி13ம் சசிற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களால் சோழர்கள் ஆட்சி முடிவுறுத்தப்படும் வரை சோழர்காலம் என வலியுறுத்தப்படுகின்றது. ஏறத்தாழ 400 ஆண்டுகள் சோழர் காலமாக விளங்குகின்றது. சோழர்காலம் அதிகமான காவியங்கள் எழுந்த காலமென்பதால் காவிமகாலம் என சிறப்பிக்கப்படுகின்றது.
சோழர் காலத்தில் அரசியல் நிலை
கி.பி 9ம் நூற்றாண்டு - 14ம் நூற்றாண்டு வரையான சோழர்கால அரசியல் நிலை முதன்மையாகக் கருதப்படுகின்றது. கி.பி 850 இல் பழையாறையில் ஆட்சி செய்த குறுநில மன்னனான விஜயாலய சோழன் பல்லவரிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி சோழராட்சியை அமைத்தான். விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த சோழன் பல்லவராட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகள் அனைத்தையும் கைப்பற்றினான். ஆதித்தனின் மகனான பராந்தக சோழன் பாண்டிய நாட்டிற்கு உட்பட்டிருந்த பகுதி மையும் கைப்பற்றிச் சோழநாட் சியை விரிவு படுத்தினான்.
இராஜராஜசோழன் காலத்தில் சோழராட்சி உயர்நிலை எழுதியது. இதன் பின் அவர் மகன் இராஜேந்திர சோழன் கங்கைநாடு தொடக்கம் வாவா, அமந்திரா தீவுகள் வரை தனது ஆட்சியை விரிவுபடுத்தினான். இரண்டாம் காலத்துக்கும் பின் சோழராட்சி வலிகுன்றி 13ம்சோழராட்சி பிற்பகுதியில் மூன்றாம் இராஜராஜ சோழனது கட்சியுடன் சோழநாட்சி முடிவுக்கு வந்தது.
இச்சந்தரப்பத்தில் பாண்டியர்கள் சோடிநாட்சியை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சோழர் காலத்தில் சமூக நிலை
சோழராட்சிகால அரசியல்நி உறுதியானதாக காணப்பட்ட மையினால் சருக நிலையும் உறுதி சிறப்பாக காணப்பட்டது. சோழர்காலத்தில் கட்சி உறுதியாலும் பொருளாதார வலுவாலும் மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. சமூகத்தில் உழவர்குடி மேலோங்கி இருந்ததுடன் கிழார்” எனும் பதம் அவர்களை குறிக்க பயன்பட்டது டன் சோழசிந்தகி கூட அப்பெயரால் சிறப்பிக்கப்பட்டதை காணமுடிகிறது. சோழ மன்னர்கள் புலவர்களை ஆதரித்தமையால். சிறந்த இலக்கிய படைப்புக் -கள் ஆக்கப்பட்டமை யை காணமுடிகின்றது. அமைதியான அறிவான சமூகமாக சோழர்கால சமூகம் திகழ்ந்தமையால் இலக்கியத்திலும் கலைகளிலும் மேம்பாடு அடைந்த நிலையைக் காணமுடிகிறது .உலகியலுக்கும் ஆன்மிகத்துக்கும். இடையில் ருரண்பாடற்ற ஒரு நிலையை சோழர்காலத்தில் அறிந்து கொள்ளமுடிகிறது.
சோழர் காலத்தில் சமய நிலை
பல்லவர் காலத்தில் தம்முள் இரண்பட்டு நின்ற: சமயங்கள் சோழராட்சி காலத்தில் பகைமையின்றி வளர்ந்தன. இதனால் சோழர் ஆட்சிக்காலத்தைச் சமயப்பொறைக்காலம் என்பர். மன்னர், மக்கள் ஆதரவுடன் தஞ்சைப்பெருங் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் தேலான பெருங்கோயில்கள் கட்டப்பட்டு அவை சமுகப்பணிகளிலும் ஈடுப்பட்டன. மெய்கண்டதேவர். இராமனுகர் முதலானோர் அத்துவிதம், விசிட்டாத்துவிதம் முதலான :தத்துவக்· கொள்கைகளைத் தமிழ் நாட்டில் பரப்பிமதும் சோழர்காலத்தில் ஆகும்.
சோழர் காலத்தில் இலக்கியங்கள்
கி.பி 9ம் நூற்றாண்டுக்கும் - கி.பி 4ம் நாற்றாண்டுக்கும் இடைப்பட்ட சோழர்காலத்தில் அதிகமான காவியங்கள் தோற்றம் பெற்றமைகினால் காவிய உற்பத்திக்காலம் என சிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சிறப்புடைய சோழர்கால இலக்கியங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
சோழர் காலத்தில் காப்பியங்கள்
பெருங்காப்பாயங்கள்
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
சிறுகாப்பியங்கள்
- யசோதரா காவியம்
- நாக்குமார காவியம்
- உதயண குமார காவியம்
- நீலகேசி
- சூளாமணி
பேரிலக்கியங்கள்
- கந்தபுராணம்
- பெரிய புராணம்,
- கம்பராமாயணம்
சிற்றிலக்கியங்கள்.
- கலிங்கத்துப்பரணி
- தக்கயாகப்பரணி
- குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
- வேர் உலா
- நளவெண் பா
- ஆளுடையார் பிள்ளைக் கலம்பகம்
- ஏர் எழுபது
- சிலை எழுபது
- திருக்கை விளக்கம்
- மெய்க்கீரத்திகள்
- சரஸ்வதி அந்தாதி
சோழர் காலத்தில் இலக்கண நூல்கள்.
- வீரசோழியம்
- நேமிநாதம்.
- யாப்பருங்கலம்
- தண்டியலங்காரம்இ வச்ச நீந்தி மாலை
- யாப்பருங்கலக காரிகை
- நன்னூல்
- நம்பியகப் பொருள்
தொகுப்பிலக்கியங்கள்.
நம்பியாண்ட நம்பியால் தொகுக்கப்பட்ட திருமுறைகள் ஸ்ரீமத் நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்
சோழர் காலத்தில் சைவ சித்தாந்த நூல்கள்
- திருக்களிற்றுப்படியார்
- சிவஞான போதம்
- சிவஞான சித்தியார்
- இபோ இருபஃது
- உண்மை விளக்கம்
- உண்மை நெறி விளக்கம்
- வினா வெண்பா
- திருவருட்பயன்
- நெஞ்சுவிடு தூது
- சங்கற்ப நிராகரணம்
- கொடிக்கவி
- போற்றிப் பஃ றொடை
- சிவப்பிரகாசம்
- திருவுந்தியார்
சோழர் காலத்தில் உரை நூல்கள்
இலக்கணத்திற்கு எழுதிய உரை
- தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரனார் உரை
- தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு தேனவராயர் உரை
- தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு பேராசிரியர் உரை
- இலக்கியத்திற்கு எழுதிய உரை
- திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை
- மெய் கண்ட தேவர் சிவஞான போதத்திற்கு எழுதிய உரை
சோழர் காலத்தில் நிகண்டுகள்
- கயாதரம்
- ஆசிரிய நிகண்டு
- உரிச்சொல் நிகண்டு.
- திவாகரம்
- மின்கலந்தை
சோழர் காலத்தில் நாடகங்கள்
- இராஜராஜன் நாடகம்.
இவ்வாறாக சோழர்கால இலக்கியங்களை வகைப்படுத்தலாம்..
0 Comments