கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை உதடுகள்
எழுதப்படாத இரண்டு வரிக் கவிதை உன் உதடுகள்
வள்ளுவன் மறந்த இரு வரி திருக்குறள்....
உலகில் மென்மையானது ரோஜா இதழ்கள்
அதற்கே சவால் விடும் உன் அழகான இதழ்கள்....
உடலின் வியர்வை இல்லாத பகுதி
ஆனால் பலரின் வியர்வைக்கு காரணமான பகுதி....
உன் இதழின் புன்னகை கண்ட நொடி
என் இமைகள் இமைக்க மறந்ததடி....
உன் உதட்டை தொட்டது சாயம்
என் மனதில் அதனால் ஏனோ காயம்....
உன் இதழின் மீது ஆராய்ச்சி கொண்டேன்
ஆணுக்கு வரப்போகும் பேராபத்தை கண்டேன்....
உன் இதழில் இருந்து வரும் மெல்லிய சத்தம்
மெதுவாய் என் இதயத்தை கொத்தும்....
உன் இதழ்கள் கன்னத்தில் முத்தமிடும்
இதர உறுப்புகள் கன்னத்துடன் சண்டையிடும்.....
என்னை கவிஞன் ஆக்கியது உன் இதழ்
காரணம் அதன் மீது நான் கொண்ட காதல்...
நன்றி - மு . பிரேம்குமார்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments