ஒரு நாள் இரவில் எனது மாமா எனது வீட்டிற்கு வந்து ஒரு சந்தோசமான விடயம் கூறப்போகிறேன் என்றார்.அதற்கு நானும் தம்பியும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தோம்.அப்போது எனது அப்பா என்ன விடயம் என்று கேட்டார். அதற்கு மாமா நாம் அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவிற்கு சுற்றுலா செல்வோம் என்று கூறினார். அதற்கு நானும் எனது தம்பியும் உண்மைதானா மாமா என்று கேட்ட போது உண்மைதான் மருமகனே என்று கூறினார்.அதைக் கேட்ட நானும் எனது தம்பியும் துள்ளிக்குதித்து விளையாடினோம்.
நான் மாமாவிடம் கேட்டேன் நாளை எப்போது நுவரிலியாவிற்கு செல்வோம் என்று மாமா அதற்கு நாளை விடியற்காலையில் 4 மணி அளவில் பேருந்து வரும் எல்லோரும் தயாராக இருங்கள் என்று கூறி விடை பெற்றுச் சென்றார். அதை கேட்ட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது எனது அம்மா உணவை உட்கொண்டு விட்டு தூங்குங்கள் என்று கூறினார் அப்போதுதான் நாளை காலையில் நேரத்துடன் எழும்பி புறப்படலாம்.அதற்கு நான் சரி அம்மா என்று கூறிவிட்டு உணவை உட்கொண்டு விட்டு தூங்கி விடியற்காற்லையில் எழும்பி புறப்பட்டேன். பேருந்தும் சரியான நேரத்தில் வந்தது.
நாங்கள் அனைவரும் பேருந்தில் ஏறி சுற்றுலா சென்று கொண்டிருந்தோம். அப்போது முதன்முதலாக காலை உணவு உண்பதற்காக மொனராகலைக்குச் சென்று காலை உணவை உட்கொண்டோம். உட்கொண்ட பின்னர் பேருந்தில் ஏறி இரண்டாவதாக எல்லே நீர்வீழ்ச்சிக்குச் சென்று பார்வையிட்டு புகைப்படம் பிடித்தோம். நான்காவதாக தோமஸ் அல்வா எடிசன் பங்களாவிற்கு சென்று பார்வையிட்ட பின்னர் அங்கு பகல் உணவை உட்கொண்டோம். ஐந்தாவதாக நுவரலியாவிற்கு செல்கின்ற போது இருட்டியதால் பதுலையில் இருக்கின்ற ஒரு பள்ளிவாயலில் தங்கினோம். தங்கின பின்னர் விடியற்காலையில் பள்ளிவாயலில் காலைக்கடன்களை முடித்தோம். நுவரலியாவிற்குச் சென்றபின்னர் ஹக்கல பூந்தோட்டத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் பேருந்தில் ஏறி கடைசியாக வீடு திரும்பினோம்.
நன்றி - M.M shakeef Arsalan
நேயர் பக்கம் இது திறமையின் தேடல் - Sl Tamil
மேலதிக விபரங்களுக்கு
👉LINK CLICK HERE👈
உங்களுடைய ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
0 Comments