இலங்கையின் மாவட்டங்கள் Districts என்பது இரண்டாம்- தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.
நடுவண் அரசு மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.
மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன. பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் 25 மாவட்டங்கள் 25 Districts of Sri Lanka.
இலங்கையின் 25 மாவட்டங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். Names of 25 districts of Sri Lanka in Tamil and English
- மட்டக்களப்பு - Mattakkalappu
- திருகோணமலை - Trincomalee
- அம்பாறை - Ampara
- யாழ்ப்பாணம் - Jaffna
- கிளிநொச்சி - Kilinochchi
- முல்லைத்தீவு - Mullaitivu
- வவுனியா - Vavuniya
- மன்னார் - Mannar
- அநுராதபுரம் - Anuradhapura
- குருநாகல் - Kurunegala
- பதுளை - . Badulla
- நுவரெலியா - Nuwara Eliya
- கண்டி - Kandy
- மாத்தளை - Matale
- இரத்தினபுரி - Ratnapura
- கொழும்பு - Colombo
- அம்பாந்தோட்டை - Hambantota
- கம்பஹா - Gampaha
- களுத்துறை - Kalutara
- கேகாலை - Kegalle
- மொனராகலை - Moneragala
- பொலநறுவை - Polonnaruwa
- மாத்தறை - Matara
- புத்தளம் - Puttalam
- காலி - Galle
0 Comments