மிக சரியாக தமிழ் மொழி பேசக்கூடிய தமிழ் நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து தமிழ்மொழியுடன் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
(உதாரனம்) ஆசாமி, சாவி
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் சேர்ந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
சொற்களின் வகைகள்
வழக்கு நிலை அடிப்படையில் நான்கு வகைப்படும்.
இயற்சொல்
திரிசொல்
வடசொல்
திசைச்சொல்
இயற்சொல்
இயல்பாக பொருள் அறியத்தக்க வகையில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
அதாவது இது படித்தோரும் , பாமரரும் விளங்க கூடிய வகையில் அமையும்.
இது நான்கு வகைப்படும்.
பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்
உதாரணம்
பெயர் இயற்சொல் - மண், மரம், பொன்
வினை இயற்சொல் - நடந்தாள், சாப்பிட்டாள், ஓடினாள்
இடை இயற்சொல் - பின், ஐ, ஆல், இனி, முன்
உரி இயற்சொல் - அழகு, அன்பு
திரிசொல்
செய்யுளிலே மட்டும் வழங்குவனவாயும் , இடம் நோக்கி பொருள் அறிந்து கொள்ள வேண்டியவனாகவும் உள்ள சொற்கள் திரி சொற்கள் எனப்படும்.
இது கற்றவர்களுக்கு மாத்திரம் விளங்கும்.
இது இரண்டு வகைப்படும்.
ஒரு பொருள் குறித்த பல சொல்
பல பொருள் குறித்த ஒரு சொல்
ஒரு பொருள் குறித்த பல சொல்
பெயர் திரிசொல்
அரசன் - கொற்றவன், வேந்தன், மன்னன், ராஜா, கோ, கோன்
அமைச்சன் - மந்திரர், சூழ்வோர், நூலோர், மந்திரிமார்
வினை திரிசொல்
அணிதல் - சூடுதல், தரித்தல், புனைதல், மிலைதல், பூணல்
சொன்னான் - செப்பினான், கழறினான், மொழிந்தான், கிளர்ந்தான்
இடை திரிசொல்
கொல் - ஐயம், அசைநிலை
ஓ - அசைநிலை, பிரிநிலை, ஐயம், தெரிநிலை
உரி திரிசொல்
அழகு - அணி, வடிவு, வனப்பு, பொலிவு, எழில்
மிகுதி - சால, உறு, தவ, நனி, கூர், கழி
பல பொருள் குறித்த ஒரு சொல்.
பெயர் திரிசொல்
உயிர், பேய், மெல்லிய புகை - ஆவி
கடல், சக்கரம், வட்டம், சில்லு - ஆழி
வினை திரிசொல்
எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு - வீசு
நீங்கினான், கொண்டான், நிர்நயித்தான் - வரைந்தான்
இடை திரிசொல்
இசை நிலை, வினா, எண், இருமாப்பு - ஏ
என்னுடைய, என்ன, என்று, உவமை உருபு - என
உரி திரிசொல்
கூர்மை, காப்பு, அச்சம் விளக்கம் - கடி
வடசொல்
தமிழோடு கலந்த வடமொழிச் சொற்கள் வடசொல் எனப்படும்.
வடசொல் இரண்டு வகைப்படும்.
தற்சமம்
தற்பவம்
தற்சமம்
ஒலி மாறுபாடின்றி தமிழில் வழங்கும் வடமொழிச் சொல் தற்சமம் எனப்படும்.
வடமொழிக்கும் , தமிழ்மொழிக்கும் பொதுவான சொற்களாக இவை கருதப்படுகின்றது.
உதாரணம்
கமலம்
குங்குமம்
காரணம்
அமலம்
தற்பவம்
தமிழிலே திரிவடைந்து வரும் வடமொழிச் சொல் தற்பவம் எனப்படும்.
சில வடமொழி சொற்கள், தமிழ் மொழி மரபுக்கேற்ப விகாரம் பெற்று வருமாயின் அவை தற்பவம் எனப்படும்.
உதாரணம்
வடமொழி - ஜலம்
தமிழ் மொழி - சலம்
வடமொழி - ஹனுமான்
தமிழ் மொழி - அனுமான்
வடமொழி - ஹரி
தமிழ் மொழி - அரி
வடமொழி - தசரதன்
தமிழ் மொழி - தயரதன்
வடமொழி - கிருஷ்ணர்
தமிழ் மொழி - கிருட்ணர்
வடமொழி - ராஜன்
தமிழ் மொழி - அரசன்
திசைச்சொல்
வடமொழி அல்லாத அயல்மொழிகளிலிருந்து தமிழில் கலந்த சொற்கள் திசைச் சொல் எனப்படும்.
கிரேக்க மொழிச் சொல்
ஓரை - நேரம்
கண்ணல் - கடிகாரம்
சுருங்கை - வான்கதவு
யவனம் - விரைவு
அரபு மொழிச் சொல்
தகவல்
வசூல்
இமாம் - இஸ்லாமிய சமய தலைவர்
இலாகா - திணைக்களம்
பாரசீக மொழிச் சொல் - ஈரான் மொழிச் சொல்
சுமார்
துப்பாக்கி - சர்க்கார்
சால்வை
சிப்பந்தி - காவற்படை
உருது மொழிச் சொல் - பாகிஸ்தான் மொழிச்சொல்
அத்தர்
அண்டா
ஆசாமி
இறாத்தல்
ஊதுபத்தி
கசாப்பு
காலி
கப்பி
கெடுபிடி
குத்தகை
சாமான்
இணாம் - இலவசம்
சந்தா - அங்கத்துவ கட்டணம்
அசல் - உண்மை
தெலுங்கு மொழிச் சொல்
இடாப்பு
இரவிக்கை
இராணுவம்
இலஞ்சம்
ஒயில்
கபோதி
சந்தடி
விருது
கன்னட மொழிச் சொல்
சமாளித்தல்
அட்டிகை
சொத்து
மலையாள மொழிச் சொல்
கொச்சி
தளபாடம்
மராத்தி மொழிச் சொல்
அட்டவணை
அபாண்டம்
கைலாகு
குண்டான்
சாம்பார்
போத்துக்கேய மொழிச் சொல்
அலுமாரி
அலவாங்கு
அன்னாசி
கடதாசி
கதிரை
கோப்பை
ஒல்லாந்து மொழிச்சொல்
சாக்கு
துட்டு
தோப்பு
கக்கூஸ்
உலாந்தா
பிரான்ஸ் மொழிச் சொல்
குசினி
துடுப்பு
பட்டாளம்
லாந்தர்
சிங்கள மொழிச் சொல்
தோடை
கொடுக்காபுளி
வத்தாளை
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் சேர்ந்து விலங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.
பெற்றம் - பசு - தென்பாண்டி நாட்டுச்சொல்
தள்ளை - தாய் - குட்ட நாட்டுச்சொல்
அச்சன் -தந்தை - குடநாட்டுச்சொல்
பாழி -சிறுகுளம்- பூழிநாட்டுச்சொல்
இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
திசைச்சொல் மொழி தமிழ்
கெட்டி - தெலுங்கு - உறுதி
தெம்பு - தெலுங்கு - ஊக்கம்
பண்டிகை - தெலுங்கு - விழா
வாடகை - தெலுங்கு - குடிக்கூலி
எச்சரிக்கை - தெலுங்கு - முன் அறிவிப்பு
அசல் - உருது - முதல்
அனாமத்து - உருது - கணக்கில் இல்லாதது
இனாம் - உருது - நன்கொடை
இலாகா - உருது - துறை
சலாம் - உருது - வணக்கம்
சாமான் - உருது - பொருள்
சவால் - உருது - அறைகூவல்
கம்மி - பாரசீகம் - குறைவு
கிஸ்தி - பாரசீகம் - வரி
குஸ்தி - பாரசீகம் - குத்துச்சண்டை
சரகம் - பாரசீகம் - எல்லை
சுமார் - பாரசீகம் - ஏறக்குறைய
தயார் - பாரசீகம் - ஆயத்தம்
பட்டா - பாரசீகம் - உரிமம்
டாக்டர் - ஆங்கிலம் - மருத்துவர்
நைட் - ஆங்கிலம் - இரவு
பஸ் - ஆங்கிலம் - பேருந்து
"செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப" - (நன்னூல் : 273)
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
1) தென்பாண்டி நாடு
2) குட்ட நாடு
3) குட நாடு
4) கற்கா நாடு
5) வேணாடு
6) பூழி நாடு
7) பன்றி நாடு
8) அருவா நாடு
9) அருவா வடதலை நாடு
10) சீதநாடு
11) மலாடு
12) புனல் நாடு
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு மெழிகள்.
1) சிங்களம்
2) சோனகம்
3) சாவகம்
4) சீனம்
5) துளு
6) குடகம்
7) கொங்கணம்
8) கன்னடம்
9) கொல்லம்
10) தெலுங்கம்
11) கலிங்கம்
12) வங்கம்
13) கங்கம்
14) மகதம்
15) கடாரம்
16) கௌடம்
17) குசலம்
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்
0 Comments