அநுராதகம என அழைக்கப்பட்ட அனுராதபுரத்தினை தலைநகராக தெரிவுசெய்து ஆட்சி செய்த மன்னனாக பண்டுகாபய மன்னன ; காணப்படுகின்றான் .இவன் இலங்கையின் முதலாவதாக கருதப்படும் அரசமரபின் நான்காவது மன்னன் ஆவான்
பண்டுகாபயன் (கி.மு. 437-367) இலங்கையின் முதலாவதாகக் கருதப்படும் அரச மரபின் நான்காவது அரசனாவான். இவன் இம்மரபின் இரண்டாவது அரசனான பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனும், மூன்றாவது அரசனான அபய மற்றும் அவனைப் பதவியிலிருந்து இறக்கிய பின் பகர ஆளுனராக இருந்த திஸ்ஸ ஆகியோரின் மருமகனும் ஆவான்.
பண்டுகாபயன் அனுராதபுர அரசன்
- ஆட்சி காலம் கி.மு. 437 – கி.மு. 367 முன்னிருந்தவர் உபதிச்சன் மூத்தசிவன்
- அரசி (மனைவி) - சுவர்ணபாலி
- மரபு - விஜய வம்சம்
- தந்தை - தீககாமினி
- தாய் - இளவரசி சித்ரா
- பிறப்பு - கி.மு. 474
- இறப்பு - கி.மு. 367
"பண்டு காபய" என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இம்மன்னன் சிங்கள மன்னனாக மகாவம்சத்தில் சொல்லப்பட்டாலும், இவனது பெயர் "பண்டு கபாயன்" (பண்டு என்றால் "பழைய" ,கபாயன் என்றால் "சிவன்") என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான "முந்துசிவன்" என்ற பெயரை ஒத்து உள்ளது என்றும், இதன்மூலம் இவன் ஒரு தமிழ் மன்னன் என்றும் வாதிடப்படுகிறது. இதே வாதம் இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் என்பவனுக்கும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பண்டுகாபய மன்னனின் இளமை வாழ்க்கை வரலாறு நீர்ப்பாசன முறைகள் என்பவற்றினை மகாவம்ச இலக்கியமூடாக அறிந்து கொள்ளமுடிகின்றது
பண்டுகாபயமன்னனின் இளமை வாழ்கை வரலாறு தீககாமினி, உன்மாதசித்திரா போன்றோர்களுக்கு மகனாக பிறந்தான்.70 வருடங்கள் ஆட்சிசெய்த மன்னனாக இவன் காணப்படுகிறான். சிறுவயதில் இருந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த மன்னனாக இவன் காணப்படுகின்றான். அதாவது உன்மாதசித்திராவுக்கு பிறக்கும் ஆண்குழந்தையால் உயிராபத்து என சோதிடர் கூறியவேளையில் பண்டுகாபய மன்னனை கொல்லமாமன்மார் முயற்சி செய்தனர்.
இதனால் பண்டுகாபயமன்னன் பலசந்தர்பங்களில் மயிரிழையில் உயிர் தப்பினான். ஒரு தடைவ தனது தோழர்களுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த தருணத்தில் மாமன்மார்களைக் கண்ட பண்டுகாபயன் அருகில் உள்ள மரப்பொந்து ஒன்றில் ஒளித்து உயிர் தப்பினான்.இன்னொரு சந்தர்பத்தில் இடையனுடன் ஆடு மேய்த்துக ;கொண்டிருந்தபோது இடையன் வீட்டில் நெருப்பெடுக்க பண்டுகாபயன் சென்ற வேளையில் அங்கு வந்த மாமன்மார்கள் இடையனையும் அவனது மகனையும் கொன்று விட்டு சென்றுள்ளனர்
பண்டுகாபய மன்னன் பண்டுல என்ற பிராமணரிடம் கல்வி பயின்றான்.பண்டுகாபயமன்னன் தனது புத்திசாலித்தனத்தால் அனைத்து சவால்களை வெற்றி கொண்ட பின் சுவர்ணபாலியினன உரியவயதில் திருமணம் செய்து கொண்டான். பண்டுகாபயமன்னனின் சமயபணிகளை நோக்கின் சிவிகசாலை சொத்திசாலை என்ற சாலைகளினை அமைத்தான். இவன் அபயவாவி ஜெயவாவி என்ற குளங்களினை அமைத்து நீர்பாசனத்திலும் தலை சிறந்த மன்னனாக கருதப்படுகிறான் இவன் சகல கலைகளையும் கற்ற மன்னனாக காணப்படுகிறான். மாமன்மார்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உயிர் ;தப்பியவனாக காணப்படுபவான் பண்டுகாபயன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனால் அமைக்கப்பட்ட சிவிகசாலை சிவலிங்கத்தை வழிபடவும் சொத்திசாலை பிராமணர்கள் மந்திரம் ஓத அமைக்கப்பட்ட சாலையாகவும் காணப்பட்டது.முன்னைய மன்னர்களின் வரலாறுகளை அறிய Áல்களே சான்றாக அமைந்ததனைக் காணலாம். எனவே அநுராதபுரத்தை தலைநகராக முதன் முதல் ஆட்சி செய்த பண்டுகாபயமன்னனின் அரசியல் பொருளாதார சமய பண்புகளினை அறிந்து கொள்ள மகாவம்சம் என்ற இலக்கியம் சான்றாக அமைகிறது.
இவனது பாட்டனான பண்டுவாசுதேவன் இறந்த பிறகு அவனுடைய மகனான அபயன் வட இலங்கைக்கு அரசனானான். பண்டுவாசனுடைய பத்துமகன்களையும் (அபயனையும் சேர்த்து) அவர்களது சகோதரியான சித்தா என்பவனின் மகனான பண்டுகாபயன் கொலை செய்வான் என்று நிமித்தர்கள் கூறியதால் அந்த பதின்மரும் பண்டுகாயனை கொல்ல முயன்றனர். அவன் இவர்களிடம் அகப்படாமல் மகாவலி கங்கையின் தெற்கு பகுதியில் மறைந்து கொண்டான். பிற்பாடு சேதியா என்னும் இயக்கர் குலப்பெண்ணின் உதவியோடு வட இலங்கையை கைப்பற்றினான். அனுராதபுரத்தின் காவல் தெய்வங்களாக சித்தராசன் என்னும் இயக்கர்களின் தெய்வத்தை நிறுவியதும் அல்லாமல் தனக்கு உதவிய சேதியாவுக்கும் கோயில் எடுத்தான். இயக்கர்களில் ஒருவனான காளவேள என்பவனை கிழக்குப் பகுதிக்கு அமைச்சனாக நியமித்தான். இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாக தெரிகிறது.
0 Comments