தமிழ் கவிதை முயற்சி திருவினையாக்கும் (Tamil Kavithai Muyarchi)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை  முயற்சி திருவினையாக்கும்

தமிழ் கவிதை முயற்சி திருவினையாக்கும் 

வெற்றித் தாகம் தீர்க்க, தரணியில் அவதரித்தவன் நீ.

ஒரேமுறையில்  உன்னை அழித்திடுமா அந்த தோல்வித் தீ, 

என்றும் முதலிலே, வென்றவன் யார் ?

நீ இறுதியில் வென்றாலும், உன்னை மறக்குமோ இந்த பார்?


உன் முயற்சிக்கு ஈடாகுமோ இமயமலை?

தோற்றால் என்ன? முயற்சி செய் இன்னொருமுறை! 

உன் துணிவுக்கு அடிமை- இந்த புவிக்கோளம்,

உன் புகழ் அழியாது நீ அழிந்தாலும்!


முயன்றால் வெல்வாய், இது சத்தியமே! 

நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே! 

மூச்சு நின்றவுடன் நிற்பதற்கு இஃதென்ன குருதி ஒட்டமா?

தோற்று அழுவதற்கு இதுதான் இறுதி ஆட்டமா?


போலி வெற்றியாளர்களிடம் இல்லையே கடினமுயற்சி..

வாழ்க்கையில் முயலாமலேயே இருந்தால், 

விரைந்து வருமுனக்கு நரம்புதளர்ச்சி!

சரித்திரத்தில் உனக்கொரு இடமிருக்கு,

உன் முயலாமையினால் அது முடங்கியே இருக்கு!    

    

ஒருநாள் கனவைத் தொலைத்துவிடு, 

ஒவ்வொரு நாளும் முளைத்து எழு!

என்ன சாதித்தாய், அமர்ந்திருந்து இருக்கையிலே?

துணிந்தெழு மனிதா? 

உன்னோடு வருவதென்ன நீ இறக்கையிலே !

நன்றி - Srimadhumitha

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

2 Comments

  1. I Like this kavidhai.....wonderful words, its very motivation for myself...awesome

    ReplyDelete
  2. Amazing kavidhai....👏 Words are very motivation.....👌 Congrats keep going...........👍.

    ReplyDelete