கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை காதல்
இருமனம் இணைந்து
தரும் சுகம் காதல் ,
உறவோ , நட்போ
எல்லையில்லா சுகம் பெறும் .
பிள்ளையின் அன்பிலும் இருக்கும்
பெற்றவரின் அன்பிலும் இருக்கும்.
அதற்கு முடிவு செய்ய
எவரும் இல்லை அகிலத்தில்.
அன்பே! மரங்களை நேசி
கனிகளாய் , பழங்களாய் தரும் காதலை,
விலங்குகளை நேசி
அக்கரையால் தரும் காதலை,
பூஞ்செடிகளை நேசி
மலர்களாய் தரும் காதலை,
நண்பர்களை நேசி
அன்பை தருவார்கள் காதலாக,
உலகத்தை நேசி
நிம்மதியைத் தரும் காதலாக
அன்பே உன்னையே நேசி
நிம்மதியைப் பெறுவாய் காதலாக......
நன்றி - ஆ. ஆர்த்தி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
.jpg)










1 Comments
காதலை நீங்கள் பார்த்த கோணம் சிறப்பு. வாழ்த்துகள்
ReplyDelete