கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
அனைவருக்கும் காதல் வாசம் வேண்டும்
காரணம் காத்திருப்புகள்
காலங்களை இனிமையாக்கும்
கடற்கரையிலேயே காற்று வாங்க
காதல் இருந்தால் இனிமையாகும்
தொழில் செய்யும் தடத்தில்
காதல் தடம் இருந்தால் இனிமையாகும்
காதல் இருந்தால் கடற்கரையும் அழகாகும்
காதல் இருந்தால் உன்னை நீ
அரிதாரம் பூசி அலங்கரிப்பாய்
காதல் இருந்தால் உன்னையே
உன்னுள் நேசிப்பாய்
காதல் இருந்து காதலியின்
வீட்டை கடக்கும் போது ஒரு பயம்
கலந்த சுகம் மனதுக்குள் வந்து போகும்
இதை உணர காதலித்து இருக்க வேண்டும்
காதலியின் உறவு உன் உறவாகும்
காதல் இருக்க ஊறும் அழகாகும்
காதலியின் பேச்சு மூச்சாகும்
கரையாத கல் நெஞ்சமும் கரையும்
காதலின் பெயரில்
கலக்கம் வேண்டாம் கண் முன்னே
நானுண்டு காதலியாக
காலங்களில் காதல் ஒரு அமரகாவியம்
கடைத்தெருவில் விற்பதில்லை
மனத்திரையில் ஓடும் மாந்திரீகம்
மை போட்டு பார்க்க தோன்றும்
அவள் மனதினை
நேராக அவளின் விழியை காண
வீரனும் தோற்றுப் போவான்
விழிகளிலே விண்ணையும் அழைப்பாள்
வீரனை விழிகளால் நிறுத்துவாள்
இது காதலால் மட்டும் சாத்தியம்
கோழையை ஊர் முன்நிறுத்தி
வீரனாக்க காதலால் மட்டுமே முடியும்
காதலித்த நாட்களை நினைத்துப் பார்
இந்த பாரும் அழகாக தெரியும்
காதலால் உலகம் எழுந்தது
காதலால் உலகம் சுழன்றது
நன்றி - கடைக்குட்டி சிம்மன்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
1 Comments
விழிகளிலே விண்ணையும் அழைப்பாள்.. ........... அனுபவமோ கடைக்குட்டி...
ReplyDelete