தமிழ் கவிதை சுதந்திரம் (Tamil kavithai Independence)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை சுதந்திரம்

தமிழ் கவிதை சுதந்திரம்

விலங்குகளுக்கு காடு சுதந்திரம்

மனிதர்களுக்கு நாடு சுதந்திரமா? 

சுதந்திரம் தந்தது யார்?

சுதந்திரம் தந்து விட்டார்களா?

சுற்றுச்சூழலை பாழாக்குவதற்கு சுதந்திரம்!

விளைநிலங்களில் வீடு கட்ட சுதந்திரம்!

ஏரிகளில் ஊர்கள் அமைக்க சுதந்திரம்

நீரில்லா ஆற்றில் மணலை அள்ளும் சுதந்திரம்


பெண்களுக்கு பாதுகாப்பில் லாத

பாழாய்போன சுதந்திரம்

பணிப் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சுதந்திரம்? 


குழந்தைகளின் குறும்புத்தனத்தை

ஆபாசத்தில் அடி போடுவதில் சுதந்திரம்!


களவுகளை கண்ணிருந்தும் கேளாமல்

இருப்பதில் சுதந்திரம்!


நிலத்தடி நீரை உறிஞ்ச உனக்கு கிடைத்த சுதந்திரம்!

மரத்தை மறந்தாய் நிழலை கனவில் தேடும் சுதந்திரம்

 

போராடி பெற்ற சுதந்திரத்தை

போர்க்களம் ஆக்குவதில் சுதந்திரம்!


ஜாதிகளை கட்டிக்காப்பதில் இருக்கும் சுதந்திரம்!

ஜாதி ஒழிப்பதில் இல்லை

ஜனநாயகத்தின் நம்பிக்கை ஒழிப்பதில் சுதந்திரம்!

நீதியை சதி யாக்குவதில் சுதந்திரம்!

காவலை ஏவல் ஆக்குவதில்சுதந்திரம்!

சுதந்திரத்தின் சூத்திரமே புரியாமல் போனது

சொல்லில் உள்ள அர்த்தம் சொல்லாமல் போனது

நடைப்பயணம்  நடந்தே போனது

 சுதந்திர நாடாக.

நன்றி - கடைக்குட்டி சிம்மன்.

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

1 Comments

  1. அருமை அருமை.... சிறப்பான கவிதை

    ReplyDelete