கட்டுரை ஆசிரியர் - சு.தியடோர் பாஸ்கான்
நாடகம் என்பது நிகழ்ச்சி ஒன்றை அவையோரின் முன் நிகழ்த்திக் காண்பிப்பதாகும்.
தமிழில் சினிமா வளராமைக்கு முக்கிய காரணம் அது நாடகத்துக்கு அடிமைப்பட்டு கிடந்தமையாகும்.
தமிழில் பேசும் படம் 1930களில் வெளிவந்தது.
சினிமா மொழியை அதன் தன்மையை தனித்துவத்தை உணர்ந்து ஒரு படைப்பாளி அழுத்தமாகக் கையாளும் போது அங்ககே நல்ல சினிமா பிறக்கிறது.
சினிமாவின் சிறப்பம்சம் தனித்துவத்தை அளிக்கும் அம்சம் சினிமா மொழி எனப்படும்.
தொழில் நுணுக்க வளர்சியின் விளைவாகப் புதுப்புது சாதனங்கள் இந்த சினிமா மொழியை வளப்படுத்துகின்றன
சினிமா மொழியை வளப்படுத்தியவர்கள்- ஹிட்ச்சாக்,உடிஆலன்,அடூர் கோபால கிருஸ்ணன்,அரவிந்தன்.
சினிமா மொழியில் உள்ளடங்குபவை - காட்சிப்படிமம்,ஒலி,படத்தொகுப்பு.
உதாரணம் காட்டும் திரைப்படங்கள்
காட்சிப்படிமம்
''அழியாத கோலங்கள்"(1978) -பாலுலமகேந்திரா ( வாய்க்கால் ஒன்றில் சிறுவர்கள் நீந்தி விளையாடுவது,அதிலொருவன் மூழ்கி இறப்பது,கிராமத்து மக்களின் வருத்தம்,அதிர்ச்சி,சிறுவனின் ஈமக்கிரியைகள்.)
ஒலி
"கல்லுக்குள் ஈரம்'' (1980) - பாரதி ராஜா (பேசும் வார்த்தைகள்,இயல்பான ஒலி - ரயில் ஓடுடதல்,பறவைகளின் இரைச்சல்,ஓடும் நதியின் சலசலப்பு.)
ஒலி காட்சிப்படிமத்திற்கு துணை போவதற்கு எடுத்துக்காட்டு - கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில்(சலவைத் தொழிலாளி குடித்துவிட்டு ஆடும் போது அவரை அடையாளப்படுத்தும் கிராமிய பாடலின் இசை)
படத்தொகுப்பு
தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட காட்சிப் படிமங்களும் ஒலிப்பதிவுகளும் ஒரு அர்த்தமுள்ள கோர்வையாக அமைக்கப்படுவது இதை சினிமா இலக்கணத்திற்கு அடிப்படை எனலாம்.
கட்- கண்ணிமைப்பது போதுகாட்சிமை போல் காட்சி மாறுவது
மயங்கித் தெளிதல்- ஒரு காட்சி மங்கி அதே தருணத்தில் அடுத்த காட்சி தரையில் தோன்றுவது
இருண்டு தெளிதல்- திரை இருண்டு பின் மறு காட்சி வருவது
0 Comments