தமிழ் கவிதை பெண்ணடிமைத்தனக் கூறுகள் இன்று Tamil Kavithai Pennadimaiththanak Koorukal Inru - சித்திரப்பாவை

தமிழ் கவிதை பெண்ணடிமைத்தனக் கூறுகள் இன்று Tamil Kavithai Pennadimaiththanak Koorukal Inru -  சித்திரப்பாவை


கொத்தனுக்கு உதவும் சித்தாள் தொடங்கி

கோபுரத்தில் வாழும் சீமாட்டி வரைக்கும்

கொட்டியே கிடக்குது ஆண், பெண் பேதம்

கோடிட்டு சொல்லுறேன் இதுவே என் வாதம்


படியளக்கும் சாமி பரமசிவன் உயர்வா?

பாதிஉடலில் நின்ற தேவி என்ன குறைவா?

பாழும் உலகம் இன்னும் நம்புது அப்படி

பார்த்ததை சொல்லுறேன் நானும் கவிப்பாடி 


எட்டுமணி நேரமே எனக்கும், உனக்கும் வேலை

ஏற்றிடும் ஊதியத்தில் ஊத்துவாங்க பாலை

ஏன்? என்று கேட்டால் பெண்தானே என்பார்

எக்கில் செய்தததே என்னுடல் என்பார்


மேஸ்திரி தொடங்கி மேலாளர் பதவி

மேலினம் என்று ஆணுக்கே தருவார்

மேய்த்திடும் எருமையில் ஒன்றென எண்ணி

மேனிநோக வேலையை நம் தலையில் வைப்பார்


நீர்பூத்த நெருப்பாய் இன்னும் அடிமைதான்

நேர்படச் சொல்லிட வழியேதும் இல்லை 

நெஞ்சுயர் மாந்தர்கள் கண்ட பெண்விடுதலை

ஏட்டோடு நின்றது என்பதே தொல்லை.


நன்றி -  சித்திரப்பாவை 


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments