செய்ந்நன்றி கொன்ற மகற்கு
செழுமை வாழ்வு என்றுமில்லை
செந்நாப்புலவர் செப்பியதையே
செதுக்கிக் கொண்டேன் என்னில்
நான் செயற்கரிய செய்வதெல்லாம்
கைக்குலுக்கி பாராட்டியவரை மறந்தாலும்
கைதூக்கி விட்டவரை மறவாது இருப்பதே
ஏடெடுத்து என்னை செதுக்கி
ஏற்றம் பெற வைத்த ஏந்தல்களை
ஏழ்பிறப்பும் என்நினைவில் கொள்வதே
ஏழையெந்தன் வரம் என்பேன்
ஒளிவிளக்கு ஏற்றி வைத்த
ஓய்வின் ஆசிரியபெருந்தகைகளோடு
உள்ளன்போடு உளமாரப் பேசி
உதவிக்கரம் நீட்டுகின்றேன்
அந்நாளில் அவர்செய்த அறமதை
அனுதினமும் நினைவில் கொண்டு
ஆற்றாமை மாணவனின் அறிவுப்பசிக்கு
அன்போடு இயன்றதை அடியேனும் தருகிறேன்
வேரூண்ட நீரை விழுங்கிக்குடித்து
தலையாலே தருமன்றோ தென்னம்பிள்ளை
வேரூன்றி நான்நிற்க வித்திட்ட வேந்தர்களுக்கு
வேண்டியதைச் செய்துதரும் நானும் அவர்பிள்ளை
நன்றி - நா. தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.











0 Comments