வசந்த கால பருவத்தின்
வானிலை எச்சரிக்கை.
இடியும் மின்னலும்
இடர்தரும் புயலும்
கன மழையோடு
கடுங் குளிரோடு
கருவிழி கொண்டு
இருவிழி தாங்கி
இதயம் பறிக்க
இங்கே வருவதால்
பருவம் வந்தோர்
பாதுகாப்பு இடம்தேடி
பத்திரமாய் இருக்க
உத்தரவு இடுகிறோம்.
நீயாக சிக்கிக்கொண்டு
சீரழிந்தால்
நிவராணம் கொடுக்க
நிர்வாகம் வராது.
முதற்புயல் என்பதால்
முடியாது போய்விடுமென
இருந்து விடாதே
மறந்து விடாதே
நல்லதும் நடக்கும்
கெட்டதும் நடக்கும்.
நம்பி விடாதே- நாம்
செல்லும் தூரம் அதிகம்.
நன்றி - செ.ம.சுபாஷினி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.











0 Comments