விழியோடு விழி நோக்கி
விதைத்துவிடுப் புன்னகையை!
விரும்பாதப் பகைவரும்
விதிர் விதிர்த்துப் போய்விடுவார்
ஆழமாய் பார்வையை அகன்றெடுத்து
அவர்முகத்தை நோக்குங்கால்
அற்பமாய் நம்மை பேசியதின்
அர்த்தமென்ன? நாணிடுவார்
நேர்க்கொண்டப் பார்வையோடு
நெஞ்சுநிமர்த்தி நாம்நடந்தால்
போர்க்குணத்துப் புல்லுருவிகளின்
புகைச்சலெல்லாம் பொடியாகும்
தீட்சண்யப் பார்வையிலே
தீயோரையும் வென்றிடலாம்
தீர்க்கமான இலக்கைநோக்கி
திண்ணமாக நடந்திடலாம்
விழிகளிலே சுடர்தந்தே
வையத்தின் மாந்தரெல்லாம்
விடிவெள்ளி என்றானார்
இகழ்வாரை எதிர்கொண்டு
இனமென்று மாற்றிக்கொள்ள
இன்முகத்துப் புன்னகையே
எந்நாளும் துணையென்பேன்
நன்றி - நா. தியாகராஜன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments