இயற்கையை அழகாய் படைத்த இறைவன்
இங்கு வசிப்பவர் வாழ்வை எப்படி வகுத்தான்?
இன்று இப்படியொரு நிலை உருவாகத்தானோ
அன்று அப்படியொரு வாழ்வை வகுத்து வைத்தான்
ஏழையவன் நிலையறிந்து நடை தெரியாத உலகினிலே
ஏழை பணக்காரன் வர்க்கம் முக்கியமாய் அமைந்ததேனோ இலட்சியமும் சமநோக்கும் என்று நீ அறிந்தவை எல்லாம் இன்று இவ்வர்க்கத்தால் பொய்த்து விடாதோ மானிடா
ஏழையவன் உள்ளத்தில் தீங்கில்லை நீ அறியாய்
ஏழையாக இருந்துபார் நீ அறிவாய் அவன் துயரை
பணக்கார வாழ்வு எல்லாம் வாழ்வு அல்ல நீ அறியாய்
பணம் காட்டும் வேஷம் அதை யார் அறிவார் இவ்வுலகில்
நல்ல புத்தகம் காட்டும் வழியினிலே
பாசம் என்ற சொல்லை அச்சிட மறந்தனரோ
பணம் என்ற சொல் மட்டும் நீங்காத வாசகமாய்
நிலைத்ததேனோ இவ்வுலகில் நீ அறியாய் மானிடா
ஏழையின் நிலையெல்லாம் நிலையில்லை நீ அறியாய்
ஏற்றம் ஒன்றை பெற்றிடவே ஏங்குதே ஏழை மனம்
புலராத பொழுதை சூழும் இருள் மயமான ஒளியினலே புதியதோர் விடியல் காண ஏங்குதே ஏழை மனம்
நன்றி - கௌஷிகா குணபாலன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments