இலங்கையின் நிர்வாகப் பிரிவுகள் Administrative divisions of Sri Lanka

Administrative divisions of Sri Lanka

இலங்கையின் மாகாணங்கள், மாவட்டங்கள், மற்றும் பிரதேச செயலகம் என பிரிக்கப்பட்டுள்ளன.

இதனையும் பார்க்க இலங்கை மாநகரங்களின் பட்டியல் மற்றும் இலங்கை நகரங்களின் பட்டியல் நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும் இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் மாகாணங்கள்

19 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மாகாணங்கள் காணப்பட்டாலும் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. எனினும், பல பத்தாண்டு கால அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன. எனினும், காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. 1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது. 1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.

  1. மத்திய மாகாணம் தலைநகர் - கண்டி பரப்பளவு (km²) - 5,674 சனத்தொகை - 2,556,774
  2. கிழக்கு தலைநகர் - திருகோணமலை  பரப்பளவு (km²) - 9,996 சனத்தொகை - 1,547,377
  3. வட மத்திய மாகாணம் தலைநகர் - அநுராதபுரம் பரப்பளவு (km²) - 10,714 சனத்தொகை - 1,259,421
  4. வடக்கு தலைநகர் - யாழ்ப்பாணம் பரப்பளவு (km²) - 8,884 சனத்தொகை - 1,060,023
  5. வட மேற்கு குருநாகல் பரப்பளவு (km²) - 7,812 சனத்தொகை - 2,372,185
  6. சபரகமுவ இரத்தினபுரி பரப்பளவு (km²) - 4,902 சனத்தொகை - 1,919,478
  7. தெற்கு தலைநகர் - காலி 5,559 சனத்தொகை - 2,465,626
  8. ஊவா தலைநகர் - பதுளை பரப்பளவு (km²) - 8,488 சனத்தொகை - 1,259,419
  9. மேற்கு தலைநகர் - கொழும்பு பரப்பளவு (km²) - 3,709 சனத்தொகை - 5,837,294


இலங்கையின் மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும்

இலங்கை 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேச செயலகங்களாகவும், மேலும் 14.008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் சிங்களத்தில் திசா என அழைக்கப்படும். மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.

இவற்றை விட மூன்று வகையான உள்ளூர் அதிகார மன்றங்கள் காணப்படுகின்றன. அவை, மாநகர சபைகள் (18), நகர சபைகள் (14) மற்றும் பிரதேச சபைகள் (256) என்பனவாகும். உள்ளூர் அதிகார மன்றங்கள், முற்கால கோரளை மற்றும் ரட ஆகிய மானியமுறைப் பிரிவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இவை முன்னர் பிரதேச இறைவரி அதிகாரிப் பிரிவு என அறியப்பட்டன.[169] பின்னர் இப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என மாற்றப்பட்டது. தற்போது இப்பிரிவு பிரதேச செயலகம் என மாற்றப்பட்டு பிரதேச செயலாளரினால் நிர்வகிக்கப்படுகிறது.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments