தாவர இராட்சியம்
தாவரங்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
பூக்கும் தாவரம்
- ஒருவித்திலைத் தாவரம்
- இருவித்திலைத் தாவரம்
பூக்காத தாவரம்
- வித்துக்களை உருவாக்கும்.
- வித்துக்களை உருவாக்காது.
வித்துக்களை உருவாக்காது.
- பிரையோபைற்றா
- தெரிடோபைற்றா
- லைகோபைற்றா
பூக்கும் தாவரங்கள் (Angiosperm)
Angiosperm என்பதன் கருத்து மூடப்பட்ட வித்துக்களைக் கொண்டவை என்பதாகும்.
இவை பூக்களைத் தோற்றுவிப்பதால் பூக்கும் தாவரங்கள் எனப்படும்.
எமது உணவுத்தேவையை நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவை மேலும் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன ஒரு வித்திலைத்தாவர வித்திலைத் தாவரம் என்பாகும்.
ஒரு வித்திலைத் தாவரம்
- வித்தினுள் ஒரு வித்திலைகள் உண்டு
- கிளை காணப்படாது.
- இலையில் சமாந்திர நரம்பமைப்புண்டு.
- அல்லிகள் 3 அல்லது அவற்றின் மடங்குகள்
- வித்துக்கள் தரைக்கீழ் முளைத்தலைக் காட்டும்
- ஆணிவேர் இல்லை, நார்வேர்த் தொகுதி காணப்படும்.
உ+ம்: தென்னை, பனை, கமுகு
இரு வித்திலைத் தாவரம்
- வித்தினுள் இரு வித்திலைகள் உண்டு
- இலையில் வலையுரு நரம்பமைப்புண்டு
- அல்லிகள் 4 அல்லது 5 இல்லாவிடின் அவற்றின் மடங்குகள்
- கிளை காணப்படும்.
- ஆணிவேரும் பக்க வேரும் உடண்டு.
- வித்துக்கள் தரைமேல் முளைத்தலைக் காட்டும்.
உ+ம் : மா,பலா, பப்பாசி
ஒரு வித்திலைத் தாவர வித்தும், இரு வித்திலைத் தாவர வித்தும்
இரு வித்துக்களுக்கும் வித்துறை,முளையம்,சேமிப்பு என்பன காணப்படும்.
பூக்காத தாவரம்
இவற்றில் சில வித்துக்களைத் தோற்றுவிக்கும் சில வித்துக்களைத் தோற்றுவிக்காது.
வித்துக்களை உருவாக்குவது Gymnospermae எனப்படும்.
வித்துக்களை உருவாக்காதவை Bryophyta, Pteridophyta, Jycophyta எபிக்கப்படுகின்றன.
ஜிம்னஸ்பேர்மே (Gymnospermae)
இவை பூக்களை தோற்றுவிப்பதில்லை. ஆனால் வித்துக்களை உருவாக்கும்.
வித்துக்கள் பழத்தினால் சூழப்பட்டிருப்பதில்லை.
வித்துக்கள் சூழலுக்குத் திறந்திருக்கும்.
இவை களைகள் இல்லாத தாவரங்களாகும். இவற்றில் கலன் தொகுதி உண்டு.
உதாரணம் :- மடுப்பனை
பிரயோபைற்றா (Bryophyta)
இவை பூக்களை தோற்றுவிப்பதில்லை வித்துக்களை உருவாக்காதவை.
இவற்றில் உண்மையான இலை, தண்டு வேர் எனும் அமைப்புக்கள் இல்லை. / பிரிவிலி அமைப்புடையவை
கடத்தும் அமைப்புக்கள் இல்லை.
பாசிகள், ஈரலுருத் தாவரங்கள் என்பன இதற்கான உதாரணமாகும்.
தெரோபைற்றா (Pteridophyta)
4 இவை முக்களை தோற்றுவிப்பநில்லை, வித்துக்களை உருவாக்காதவை.
இயற்றில் உண்மையான இலை, தண்டு, வேர் எனும் அமைப்புக்கள் உண்டு.
கத்தும் அமைப்புக்கள் உண்டு.
பன்னத் தாவரங்கள் இதற்கான உதாரணமாகும்.
பாகுபாட்டு பிரமாணங்கள்
அதே போல விலங்குகளின் பாகுபாட்டுப் பிரமாணங்கள் வாழிடம், தூக்கங்களின் பிரசன்னம், ஓடுகள் உண்டா இல்லையா, உணவு உட்கொள்ளும் முறை, வன்கூட்டின் தன்மை போன்ற பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்
அங்கிகளின் பாகுபாடு அவற்றின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இந்த இயல்புகள் பாகுபாட்டுப் பிரமாணங்கள் எனப்படும்.
தாவரப் பாகுபாட்டுப் பிரமாணங்கள் புக்கும், பூக்காது. வித்துக்கள் உண்டு. இல்லை. கடத்தும் அமைப்புக்களின் பிரசன்னம், இலை வேர் தண்டுகளின் பிரசன்னம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கும்.
0 Comments