இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு இதுவாக காணப்படுகின்றது. இக்கல்வெட்டு பொலன்னறுவை திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் தலைமையகத்தின் கல்வெட்டுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு சுமார் 45 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட இந்தக் கல்வெட்டு எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று இதுவரை கண்டரியப்படவில்லை மேலும் தொல்லியல் துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் ராகுலலங்கார அரச அதிபர் தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த 26ஆம் திகதி முதல் கல்வெட்டுப் பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதியெடுப்பு நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையின் மிகவும் அரிதான மிகப் பெரிய ஆவணத்தைப் பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து காட்சிப்படுத்தல் நிகழ்ச்சியொன்று அமுல்படுத்தப்படும் என திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப திம்புலாகல ராகுலலங்கார நா தேரர் மேலும் தெரிவித்தார்.
0 Comments