1972 யாப்பின் சாதகங்கள் - 1972 Advantages of yap - Sltamil

1972 Advantages of yap - Sltamil

இலங்கை தேசிய அரசுப் பேரவை - National Assembly of Sri Lanka

தேசிய அரசுப் பேரவை (National State Assembly) என்பது இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் படி 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபை ஆகும். 1947 இல் உருவாக்கப்பட்ட இரு அங்க இலங்கை நாடாளுமன்றம் (இலங்கை பிரதிநிதிகள் சபை மற்றும் இலங்கை செனட் சபை) ஆகியவை இல்லாதொழிக்கப்பட்டு ஓரங்க முறைமையுடன் கூடிய தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது.

1970ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு பதிலாக புதியதோர் அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது. இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. 1972-1978 காலப்பகுதியில் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்று கூறப்பட்டது.

1972 யாப்பின் ஓரங்க மன்றம் - Oranga forum

சோல்பரி அரசியலமைப்பில் கீழ் (1947-1972) இலங்கையின் சட்டவாக்கத்துறையானது இரண்டு மன்றங்களைக் கொண்டதாக இருந்தது.

  • பிரதிநிதிகள் சபை
  • செனட் சபை

இரண்டு மன்றங்களும் இணைக்கப்பட்டு இறைமைமிக்க ஓரங்க மன்றத்தை உடையதாக தேசிய அரசுப் பேரவை ஏற்படுத்தப்பட்டது.

1972 யாப்பின் அங்கத்தவர் தெரிவு - Member Selection

1972 அரசியலமைப்பின் 77ம் உறுப்புரைப்படி: அமைக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கைக்கு இணங்க மக்களால் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே தேசிய அரசுப் பேரவை கொண்டிருக்கும்.


1974ம் ஆண்டில் நோயெல் தித்தவெல தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவானது தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 168ஆக வரையறை செய்தது.

1972 யாப்பின் பதவிக்காலம் - Tenure

அரசியலமைப்பின் 40ம் உறுப்புரை (1) பந்தி தேசிய அரசுப் பேரவையின் பதவிக்காலத்தைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது.

அவ்வரசியலமைப்பின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தேசிய அரசுப் பேரவையும், அது முன்னரே கலைக்கப்பட்டாலொழிய அதன் முதற்கூட்டத் தேதியிலிருந்து 6 ஆண்டு காலத்துக்குத் தொடர்ந்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்படலாகாது. அந்த 6 ஆண்டு கழிவதே தேசிய அரசுப் பேரவையைக் கலைப்பதாகச் செயற்படுதல் வேண்டும்.

இதன்படி தேசிய அரசுப் பேரவையின் கூடிய பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.

1972 யாப்பின் தகைமைகள் - Appurtenances

பொதுதேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற எவரும் தேசிய அரசுப் பேரவை உறுப்பினராகத் தகுதியுடையவர்.

தேசிய அரசுப் பேரவையின் அதிகாரங்கள்

அத்தியாயம் 1

4ம் உறுப்புரை - மக்களின் இறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய அரசுப் பேரவை மூலம் பிரயோகிக்கப்படும்.

5ம் உறுப்புரை - தேசிய அரசுப் பேரவை குடியரசின் அரசதத்துவத்தின் மிக உயர்ந்த கருவியாகும். அதுவே மக்களின் சட்டவாக்க, நிர்வாக, நீதிப் பரிபாலன அதிகாரங்களைக் கொண்டு இயங்கும்.

1. மக்களின் சட்டவாக்க இறைமை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய அரசுப் பேரவையின் ஊடாகப் பிரயோகிக்கப்படும்.

2. மக்களின் பாதுகாப்பு, நிர்வாக இறைமை சனாதிபதி, கெபினட் ஊடாக நிறைவேற்றப்படும்.

3. நீதி, நிர்வாக இறைமை அதற்கென அமைக்கப்பட்ட நீதித்தாபனங்கள் ஊடாக நிறைவேற்றப்படும். இந்த முத்துறை அதிகாரமும் தேசிய அரசுப் பேரவையின் சட்டவாக்க அதிகாரம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும்.

முத்துறைகளிலும் சட்டவாக்க அதிகாரமே முக்கியமானது. நாட்டுக்குத் தேவையான சகல சட்டங்களையும் ஆக்கலாம், மாற்றலாம், நீக்கலாம்.

தேசிய அரசுப் பேரவை தனது சட்டவாக்க அதிகாரத்தைத் துறக்கவோ, கையளிக்கவோ, பாதிப்பு ஏற்படுத்தவோ முடியாது. அதேநேரம், தேசிய அரசுப் பேரவைக்குச் சமனான அதிகாரம் பொருந்திய எந்தவொரு தாபனத்தையும் அமைக்கவும் முடியாது. (45வது உறுப்புரை), (தேசிய அரசுப் பேரவை விரும்பினால் துணை நிலைச் சட்ட ஆக்க அதிகாரத்தை ஏனைய தாபனங்களுக்கு வழங்கலாம், மீளப் பெறலாம்.)

தேசிய அரசுப் பேரவையின் நிகழ்ச்சிகளின் மீதோ அல்லது அது செய்த, அது செய்யாது இருக்கும் அல்லது செய்யாதுவிட்ட எதன் மீதும் எந்த நீதிமன்றமோ அல்லது நீதியைப்பரிபாலிக்கும் எந்தவொரு நிறுவனமோ நீதிப்பரிபாலனம் செய்ய முடியாது.

நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரம் - சட்டவாக்க அதிகாரத்தில் இடம்பெறல். இதனால் எந்த உள்ளுராட்சித் தாபனமும், நிறுவனமும் வரிவிதிக்க வசூலிக்க முடியாது. (தேசிய அரசுப் பேரவையின் தீர்மானப்படியே செயலாற்ற வேண்டும்.)


1972ல் இலங்கையில் ஜனாதிபதி - President of Sri Lanka in 1972

மே 22 1972 ல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கைத் தலைவராக சனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னைய சோல்பரி அரசியலமைப்பில் மகா தேசாதிபதியால் புரியப்பட்ட கடமைகளில் பெரும்பாலானவை சனாதிபதியால் புரியப்பட்டது. இங்கு முக்கிய மாற்றமாக சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகமாகக் காணப்பட்ட மகாதேசாதிபதி (இலங்கை) பிரித்தானிய முடியால் நியமிககப்படுவார். இதனால் அவர் பிரித்தானிய முடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருந்தார். ஆனால், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் சனாதிபதியை இலங்கைப் பிரதமர் நியமிப்பார். இவர் இலங்கைப் பிரதமருக்கும், மந்திரி சபைக்குப் பொறுப்புக் கூறக்கூடியவர். ஆகவேதான் சனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்பட்டார்.

ஜனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் - Characteristics and philosophies of the President

அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் 19, 20, 21ம் உறுப்புரைகள் குடியரசின் ஜனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.

1972 யாப்பின் 19ம் உறுப்புரை

இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும்.

1972 யாப்பின் 20ம் உறுப்புரை

ஜனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.

1972 யாப்பின் 21ம் உறுப்புரை

அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும். தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும், கூட்டத் தொடர்களை நிறுத்தவும், கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பார். மேலும், இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்தும் இருப்பார்.


ஜனாதிபதி நியமனம்

குடியரசு ஜனாதிபதியின் நியமனமும், அவர் பதவியேற்றலும் அரசியலமைப்பின் 25வது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரியும் நோக்கத்திற்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் சனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம்.அவ்விதம் பெயர் குறிப்பிட்ட ஆள் மிகவுயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற முதன்மை நீதிபதி முன்னர் அல்லது அந்நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் முன்னிலையில் சத்தியம் செய்து கொள்வதன்மேல் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி மேற்கொள்வார். (இதன்படி ஜனாதிபதியை பிரதம மந்திரியே தெரிவுசெய்வார் என்பது புலப்படுகிறது. இலங்கையில் முதலாவது ஜனாதிபதியாக வில்லியம் கொப்பல்லாவ தெரிவு செய்யப்பட்டார்.)

ஜனாதிபதி பதவிக்காலம்

இது பற்றி அரசியலமைப்பில் 26ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. சனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும், இக்கால எல்லை கழியினும்கூட அடுத்துவரும் சனாதிபதி அவரது பதவியை ஏற்கும் வரை தொடர்ந்தும் சனாதிபதிப் பதவியை வகித்தல் வேண்டும்.

சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பங்கள்

(26ம் உறுப்புரை 2ம் உப பிரிவு)

01. சனாதிபதி இருக்குமிடத்து அல்லது,

02. இராஜினாமாச் செய்யுமிடத்து

03. உளப்பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக சனாதிபதி அவரது பதவியின் பணிகளைப் புரிய இயலாதவராகிவிட்டார் என முதலமைச்சர் தீர்மானிக்குமிடத்து,

04. முதலமைச்சராற் பிரேரிக்கப்படுவதான சனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் ஒன்றைத் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து,

05. தேசிய அரசுப் பேரவை உறுப்பினரின் மொத்தத் தொகையில் ஆகக்குறைந்தது அரைபங்கினருக்குக் குறையாதோராற் கையொப்பமிடப்பட்டதும் எவரேனும் உறுப்பினராற் கையொப்பமிடப்பட்டு சபாநாயகருக்கு முகவரியிடப்பட்டதுமான எழுத்திலான அறிவித்தலொன்றின் மூலம் கொண்டுவரப்படும் சனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானமொன்றை (சமுகமாயிராதோர் உட்பட) தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்களின் மொத்த தொகையில் ஆகக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்குக் கொண்டேனும் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து

சனாதிபதியின் அந்தஸ்தும், அதிகாரமும் மகாதேசாதிபதியை ஒத்தது. (ஆனால் மகா தேசாதிபதியின் சில கடமைகளை நேரடியாக நிறைவேற்றலாம்)

தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு சனாதிபதியின் அங்கீகாரம் பெறவேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய, நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது.

இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரவும் முடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.

கடமைகளும், அதிகாரங்களும்

சனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

1. தேசிய அரசுப் பேரவையைக் கூட்டல், கலைத்தல், ஒத்தி வைத்தல்

2. சடங்கு ரீதியான இருக்கைகளுக்கு தலைமை விகத்தல்

3. அரச கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தல்.

4. பொது இலட்சினையை வைத்திருத்தல் பிரயோகித்தல்.

5. அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தல்.

6. பொதுத் தேர்தலின் பின் அரசாங்கத்தை அமைத்தல்.


நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

1. போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனப்படுத்தல்.

2. பிரதமர், அமைச்சர்கள்ää பிரதியமைச்சர்கள் போன்றோரை நியமித்தல்.

3. அரசாங்கசேவை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், இராணுவம் தளபதி ஆகியோரை நியமித்தல்.

4. கணக்காளர் நாயகத்தை நியமித்தல்

5. வெளிநாட்டுத் தூதுவர்கள் உயர்ஆணையாளர்கள் பூரண அதிகாரம் பெற்ற முகவர்கள், இராஜதந்திரிகள் போன்றோரை நியமித்தலும் வரவேற்றலும்

6. அரசாங்க சேவை ஆலோசனை சபை, அரசாங்க சேவை ஒழுக்காற்று சபை உறுப்பினர்களை நியமித்தல்

7. கெபினட் செயலாளர்கள், பாராளுமன்றச் செயலாளர் ஆகியோரை நியமித்தல்


நீதித்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

1. உயர்நீதிமன்ற நீதியமைச்சர்களையும், மேல்நீதிமன்ற நீதியமைச்சர்களையும் நியமித்தல்

2. நீதித்துறை நாயகத்தைத் தெரிவு செய்தல்

3. நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.

4. நீதிச்சேவை ஒழுக்காற்று உறுப்பினர்களை நியமித்தல்

5. குற்றவாளிகளை மன்னித்தல்Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments