கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இலங்கையின் நிலைமை
அன்றொருநாள் கண்ட அமைதிதான் எங்கே
அணைத்திடடார் முழுதும் மனமகிழ்வு போயிட்டே
கணையாழி கண்ட சீதையவள் வந்தால்
கதி கலங்கி தானே போவாள் ராமனிடம் கணமே..
நிலையான மனிதர் நிறையத்தான் கண்டும்
நிலையில்லா வாழ்வே நிகழ்காலம் என்றும்
கொலை கொள்ளை செய்த கொடிய பகை கொண்டோர்
சிலை மனதை இன்றும் சின்னதாயே கண்டோம்…
தலை நன்கு இல்லை இன்றும் புது தழை ஒன்றும் இல்லை,
அலை அலையாய் வந்த அவர் சந்ததிகள் புது தொல்லை,
அவை எல்லாம் மறைய அனுமதித்தான் கேட்டு
சபை எங்கும் சண்டை அவல் தின்பார் முன்னே..
அயல் நாட்டில் நடக்கும் அளப்பரிய மாற்றம்,
அவப்பெயரை தந்து எமை அவமதிக்கும் கூட்டம்,
அதுவெல்லாம் மாற அமைதியாய்த்தான் வாழ
நயம் கொண்ட ஆண்டவனும் எமக்கு நல்வழியை காட்டு...
நன்றி - Rajpirathap
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments