கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை இயற்கை
இயற்கை என்னும் அழகை ரசிக்க
இறைவன் என்னை படைத்தானோ-அட
இயற்கை என்னும் பேரழகில் நான்
இன்பமாக வாழ்கின்றேன்!
எத்தனையோ நன்மைகள் இயற்கை
நமக்க அள்ளி தர!
பல கோடி தீமைகள் திருப்பி
நாமும் கொடுக்கின்றோம்!
மரம் வெட்டி மனிதம் இழந்த
எத்தனையோ மூடர்கள்!
மரம் நட்டு வாழ்வில் உயர்ந்த
எத்தனையோ சிறந்தோர்கள்!
ஐம்பூதத்தால் நம்மை அடக்கி ஆளும்
இயற்கை ஒரு இளவரசி!
அவள் தானே நம்மை
வாழ வைக்கும் இன்பப்பரிசு!
இயன்றவரை இயற்கை அவளை போற்றிடுவோம்!
இக்கணமே அவளை காக்க புரட்சிக் கொள்ளும்!
இயற்கையோடு நான் கழித்த
நினைவுளோ ஏராளம்!
இயற்கை அன்னை எனக்கு அளித்த
பரிசுகளோ தாராளம்!
இயற்கை நானும் தான் சிறந்த நண்பர்கள்
அவள் மடியில் சாய்ந்தே வாழ்வேன்
காலமெல்லாம் என்றும் நட்புடன்!
இயற்கை நீயே என் இறைவனடி!!!
நன்றி - ஜெயப்பிரியா.லெ
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
1 Comments
My name also jeyapriya. Im also a poet.
ReplyDelete