கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அம்மா
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை
பக்குவமாய் கையிலேந்தி உத்திரத்தை உணவாக்கி
மடிமீது தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்திடுவாள்...
பால் நிலவைக்காட்டி பாற்சோறு ஊட்டிடுவாள்
பள்ளி செல்லும் போதெல்லாம்
பார்த்துப் போய் வா என்று சொல்லி பாசமுத்தம் தந்திடுவாள்...
தான் படும் கஷ்டம் எல்லாம் தன் பிள்ளை படக்கூடாது
என்றெண்ணி பாடுகள் பலபட்டு படிப்பிக்க முனைந்திடுவாள்...
நோய் நொடி வந்தாலும் நொடிக்குநொடி துடித்துடித்துப் போவாள்
தூக்கம் மறந்திடுவாள் துயர் துடைத்திடுவாள்...
குற்றம் பொறுத்திடுவாள் குறைகள் களைந்துடுவாள்
சுற்றம் எதிர்த்தாலும் பெற்றவள் அவள் பேறு காத்திடுவாள்...
பிள்ளைகள்தான் அவள் உலகம் பாசம்தான்
அவள் வீடு தியாகமே அவள் சொத்து
அம்மா என்று அழைக்கும் முன்னே
அருகில் வந்து அணைத்திடுவாள்...
பார் கண்ட முதல் அதிசயம் அம்மா என்ற உறவே!
பிரபஞ்சத்தின் அற்புதப்பிறவி நீ அல்லவோ அம்மா!
கோடியாய் கொடுத்தாலும் தாய் மடியை விட
சொர்க்கம் உண்டோ இவ்வுலகில்!?
அம்மா உந்தன் பாதம் தொட்டு
தினமும் நான் வணங்க வேண்டும்
அல்லும் பகலும் அன்னையே
உனக்கு சேவை செய்ய நான் ஏங்க வேண்டும்...
மறுபடியும் வாய்ப்பிருந்தால் அம்மா
உன் மடிமீதே தவழவேண்டும்
இல்லையேல் மறுஉருவாய்
என் மடியில் மகிழ்விக்க நீ வரவேண்டும்...
நன்றி - ப. கீர்த்தனா
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments