திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Tirunnasambandhamurthy Nayanar)

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இவரை திருஞானசம்பந்தர் என்றும் அழைப்பர் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும். அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலிடத்தில் உள்ள நால்வருள் ஒருவராவார்.

சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார். 

சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக கி.பி. 637 ஆம் ஆண்டு சம்பந்தர் பிறந்தார்.

ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்.

திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விவரித்துள்ளார். இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,

`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.


திருஞானசம்பந்தர் வாழ்க்கை குறிப்பு

இயற்பெயர்  = ஆளுடையபிள்ளை

பெற்றோர்  = சிவபாதஇருதயார், பகவதி அம்மையார்

ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்

மனைவி = சொக்கியார்

வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்

மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்

நெறி = மகன்மை நெறி

ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி

இறைவனடி சேர்ந்த இடம் = பெருமணநல்லூர்

இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்


 திருஞானசம்பந்தர் படைப்புகள்

1,2,3 ஆம் திருமுறைகள்

முதல் மூன்று திருமுறைகள் ”திருகடைகாப்பு” எனப்போற்றுவர்


திருஞானசம்பந்தர் வேறு பெயர்கள்

ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)

திருஞானம் பெற்ற பிள்ளை

காழிநாடுடைய பிள்ளை

ஆணைநமதென்ற பெருமான்

பரசமயகோளரி

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)

திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி என்னும் நூலில்)

இன்தமிழ் ஏசுநாதர்

சத்புத்திரன்

காழி வள்ளல்

முருகனின் அவதாரம்

கவுணியர்

சந்தத்தின் தந்தை

காழியர்கோன்

ஞானத்தின்திருவுரு

நான் மறையின்தனித்துணை

கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)


 திருஞானசம்பந்தர் நிகழ்த்தியஅற்புதங்கள்

மூன்றாம் வயதினிலே, உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.

திருமறைக்காடு  மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.

திருப்பாச்சிலாச்சிரமம் மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்

திருமருகல் பாம்பு தீண்டியவணிகனின்விடம்நீக்கினார்

திருவோத்தூர் ஆண்பனையைபெண்பனைஆக்கினார்

மதுரை  வாதத்துக்குஅழைத்தபுத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.

மயிலாப்பூர் குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.

சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக்கிழியும் (பொன்முடிப்பு) பெற்றது.

வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.

சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது) வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார்; ஆற்றில் கால் வைக்க முயன்ற போது, ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன; எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார்; சிவபெருமான், நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லிக் காட்சி அருளினார்; இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை, வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம்.

பாலை நிலத்தை, நெய்தல் நிலமாகும்படி பாடியது.

பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு, எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே, படிக்காசு பெற்றது.

விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

வெள்ளெழும்பை பெண்ணாக்கியது.


திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டமை

ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர், ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி, அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்து அழுதார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும், உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே, பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி, உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.

(பெரிய புராணம் பாடல் 1970)

எண்ணரிய சிவஞானத்

தின்ன முதங்குழைத் தருளி

உண்ணடிசில் எனஊட்ட

உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக்

கையிற்பொற் கிண்ணமளித்

தண்ணலைஅங் கழுகைதீர்த்

தங்கண்ணார் அருள்புரிந்தார்.


(பெரிய புராணம் பாடல் 1973)

சிவனடியே சிந்திக்குந்

திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும்

பாங்கினி லோங்கியஞானம்

உவமையிலாக் கலைஞானம்

உணர்வரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர்

தாமுணர்ந்தார் அந்நிலையில்

பிரம தீர்த்தில் நீராடிய சிவபாத இருதயர், பால்வழிய நின்ற பிள்ளையைப் பார்த்து “யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்?” எனக் கோல் கொண்டோங்கினார். உடனே ஞானசம்பந்தர் தமக்குப் பால் கொடுத்த பரம்பொருளை அடையாளங்களுடன் சுட்டித் “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடினார்.

திருச்சிற்றம்பலம்

தோடுடைய செவியன் விடையேறியோர் 

தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் 

உள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் 

தேத்தஅருள் செய்த

பீடுடையபிர மாபுரம்மேவிய 

பெம்மானிவ னன்றே. 

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் சிறப்புகள்

மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.

இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறேசிவத்தலங்கள் சென்று பாடினார்.

இவரின் அனைத்துப் பதிகங்களிலும்எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும்அயனும்” காண இயலாத சிவபெருமானின்பெருமையும், பத்தாவது பாடல் “சமணபௌத்தசமயங்கள்” துன்பம் தரும் தீங்கினைஉடையன என்றும் பாடும் பாங்கினைகொண்டுள்ளன.

16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.

அந்தணரானசம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்டயாழ்பாணரை அழைத்து செல்வார்.

இவர் தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்

மதுரையில்அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களைதோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.

இவரின் தோழர் = சிறுத்தொண்டர்எனப்படும்பரஞ்சோதியார்

ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.

கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181

220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.

சம்பந்தரும்நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்

தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)

திருநாவுக்கரசரை “அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.

இவரின் நெறி = மகன்மை நெறி

இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்

சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.

தம் பாடல்களில்23 பண் அமைத்துப்பாடியுள்ளார்.

ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில்அமைத்துப்பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.

யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திரகவிக்கும்முதன் முதலில் தொடங்கி வைத்தவர்சம்பந்தரே ஆவார்.

சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப்போற்றப்படுகிறது.

இவர் “முருகனின்அவதாரமாகவே” கருதப்பட்டார்.

யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.

 திருஞானசம்பந்தர் மேற்கோள் பாடல்கள்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமைநன்னெறிக்குஉய்ப்பது

வேத நான்கினும்மெய்ப்பொருளாவது

நாதனாமநமச்சிவாயமே

சிறையாரும்மடக்கிளியே இங்கே வா தேனொடுபால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பிரண்டுமுடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்குமிகவே



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments