தமிழ் கவிதை உதயம் (Tamil Kavithai Uthayam)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை உதயம்

தமிழ் கவிதை உதயம்

உடைந்தவையும் உதிர்ந்தவையும் 
உரமூட்டுகையில் 
உருவாகும் உன்னதமே 
உதயம்!

உடைந்த கற்களின் உதயம்
உறுதியான கட்டிடத்திற்கு மணல் ஆகையில்!
உதிர்ந்த இலைகளின் உதயம்,
உரமாகி மண்ணுக்கு உயிரூட்டுவதில்!
உலகின் ஒளி' கதிரவனின் ' உதயம்- சோம்பலை 

உதிர்த்துவிட்டு,
உதிரத்தின் நிறத்தில் 
உத்வேகம் கொண்டு 
உதிக்கையில்!

உலகில் உடைந்து, உதிர்ந்தவையெல்லாம் 
உதயமாகையில்,
உடைந்த - துயரில் உரைந்த 
உள்ளமும் ,

உதயத்திற்குத்தான் -என
உன்னை நம்பும்
உன்னதத் தருணமே 
உனக்கான உதயம்!  

நன்றி - வி.ஆஷாபாரதி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments