கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தனிமை
"என்னுயிர் உறவுகள் உதறி தள்ளும்போது
உன்னுயிராய் என்னை வாரி அணைத்தாய்.....
நான் தனியறையில் புகுந்த போது
என் துணையாய் என்னருகில் அமர்ந்தாய்.....
கவலைகள் நிரம்பி கண்ணீர் கரையும் நேரம்
நீ எனை தழுவி கரம் பிடிப்பாய் அது போதும்.....
ஆயிரம் எண்ணங்கள் என் நினைவில் வரும்
உன்னிடம் மட்டுமே அதற்கு தீர்வு வரும்.....
உன்னுடன் சேர்ந்து நான் நடை போடுவேன்
அப்பொழுதெல்லாம் என் கேள்விக்கு விடை தேடுவேன்.....
என்னை அச்சிருத்தி உன்னிடம் காலம் தள்ளும்
அக்கணமே என் எண்ணம் இந்த ஞாலம் வெல்லும்......
மனமோ இசையவில்லை உன்னை விட்டு
கண்ணீர் கரைகிறது கண்களை விட்டு.....ஶ்ரீ
தனிமை, நினைத்தேன் இவ்வுலகம் எனக்கு கொடுத்த ஆளுமை என்று
பின்பே உணர்ந்தேன் அதுவே நல்ல தோழமை என்று......
என்றும் என்னை விட்டு நீங்காது இந்த தனிமை
இன்றும் உணர்கிறேன் இதுவே சுகமான இனிமை..''
நன்றி - மு.பிரேம் குமார்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments