கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை ஆசிரியர்
ஆசானே என் இனிய ஆசானே நீ ஒரு சிற்பி
வாழ்க்கையை செதுக்கி வடிவம் அளிக்கிறாய்..
ஆசானே என் இனிய ஆசானே நீ ஒரு வண்ணத்துப்பூச்சி
உன் வண்ணங்களை எல்லாம் எங்களுக்கு பூசி மகிழ்கிறாய்.
ஆசானே நீ ஒரு தீபச்சுடர் தன்னைத் தானே
எரித்துக் கொண்டு எங்களின் வாழ்வை ஒளிமயமாக்குகிறாய்.
தன்னலம் இல்லாத தகையவன் நீ
தன் நலம் கூட பாராமல் ஓடி ஓடி உழைக்கும் உத்தமன் நீ.
உன்ன அறிவு சொத்துக்கள் அனைத்தும்
எங்களின் வாழ்க்கையை மாற்றும் பொக்கிஷம் அல்லவா!
அதைப் போற்றி பாதுகாப்போம்..
தலை வணங்கும் பிரம்மாக்கள் நீவீர்
ஆசானே தலைவணங்கும் பிரம்மாக்கள் நீவீர்
படைப்பவை அனைத்தும் நீதானே அன்புள்ளம் கொண்டவனாக !
அறிவுடன் செயல்படுபவனாக! அக்கறையுடன் நடப்பவனாக
பகுத்தறியும் திறன் உடையவனாக
இத்தனையும் நீ அளிக்கும் படைப்பாற்றல் அல்லவா?.
உலகில் இருப்பவை ஏழு அதிசயங்கள்
எனில் உன்னை நான் எட்டாவது அதிசயமாக கூறுவேன்..
ஏணி போட்டாலும் எட்டாத உயரத்தில்
என்னை ஏற்றி அண்ணாந்து பார்க்கும்
உயர்ந்த உள்ளம் கொண்டவன் அல்லவா நீ.
நம்பிக்கையை தூண்டுகிறாய் நீ என் மனதில்
நட்சத்திரமாய் மின்னுகிறாய்
எத்தனை கோடி அன்பு எத்தனை கோடி அரவணைப்பு
எத்தனை கோடி அறிவுரைகள் எத்தனை கோடி வழிநடத்துதல்கள்
இன்னும் இன்னும் ஏராளம் குவிந்து கிடக்கின்றன தாராளமாய்...
உன் உன்னதங்களை கூற வாய் வலிக்கும்
பேனாவோ மை தீர்ந்து போகாமல் இருக்கும் வரம் கேட்கும்.
நன்றி - சத்தியா .N
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments