தமிழ் கவிதை கணவன் (Tamil Kavithai Husband)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை கணவன்

தமிழ் கவிதை கணவன்

கணவனே எனக்கு மனைவி என்ற பொறுப்பைத் தந்தவனே.

தந்தவனே நீ தான் கதி என்று வந்த என்னை.

என்னை உன் உறவோடு சேர்ந்து நீ செய்த கொடுமை.

கொடுமை‌ எது என்றால் கணவன் செய்யும் கொடுமைதான்.


கொடுமை தான் அது, அதை மறக்க விம்மி அழுகிறேன்.

அழுகிறேன் இனி எனக்கு விடுதலை இல்லை என்று.

இல்லை இனி என்றார் ஆனால்

இன்னும் தொடர்ந்து வரும் அடிமை தான் நான்.


அடிமை தான் நான்,ஆனால் உன் உறவோடு அல்ல,

என் பிள்ளையின் அன்பிற்கு.

அன்பிற்கு அர்த்தம்  தெரியாத  உறவோடு

உறவோடு வாழ்ந்து இன்னும் சில காலங்கள் இருக்கும் நிலையில்,


இந்நிலையில் இன்னும் போராட சொன்னால் என் செய்வேன்.

என் செய்வேன் உன் உறவு தரும் வலியை.

வலியை மறக்க அழுதால் மறந்துவிடு என்பாய்.

மறந்துவிடு என்பாய் ஆனால் மருத்துவிடும் வரை நினைப்பேன்.


நினைப்பேன்‌அந்த வலியை நான் பிணம் ஆகும் வரை.

பிணம் ஆகும் வரை உன் உறவு விட போவதில்லை கொடுமையை

கொடுமை என்ன வென்றால் தன் வீட்டு பெண் உயர்ந்தவளாம்

உயர்ந்தவள் அவள் அல்ல என்று தெரிந்தும்


தெரிந்தும் நீங்கள் செய்த தவறை சுட்டி காட்ட நினைத்தால்

நினைப்பாய் எனை என்றும் தவறாய் தவறில்லை வேறுவழி இல்லை

ஊமை ஆவது தான் ஊமை ஆகவே இருக்கிறேன்

காலம் வரும் வரை காத்திரூப்பேன்!

நன்றி - S Adhilakshmi

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments