தமிழ் கவிதை நட்பு-நண்பன் (Tamil Kavithai Friendship Friends)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை நட்பு-நண்பன்


தமிழ் 
கவிதை 
நட்பு-நண்பன்

வாசம் தரும் பூக்களும் ஒரு நாள் வாடிவிடும்..…!!!

நட்பால் வாடிய பூக்களும் வாசம் பெறும்.…!!

ஓடிய பொழுதும் ஒருநாள் நிற்கும்.…!!!

உன்னை சந்தித்த பொழுதும் நினைவில் என்றும் நிற்கும்.…!!!


வீதி தோறும் யாரும் காண நட்பு கூட நவரச இதழ்.…!!!

கூட ஒரு நண்பன் இருந்தால் கோபுரங்கள் கூட கூடைப் பூக்கள்..!!!!

நட்பின் என் மொழி..!!! நட்பின் நாற்றே..!! ஊக்கத்தின் ஊற்றே..!!

கல்வியின் நிழலே காலத்தின் கனலே..!! 


ஊற்றின் உறைவிடமே நட்பின் நினைவிடமே..!!

நட்பின் கோயிலே நண்பனின் சிலையே..!!

சிந்தனை சிற்பியே சிற்பியின் உளியே..!!

உளியின் ஒளியே ஒலியின் மொழியே..!!


மொழியின் முதலே முதலின் முடிவே...!!

அறிவின் ஆலயமே..  நட்பின் தோழமையே..!!

ஊக்கத்தின் உறைகடலே ஒற்றுமையின் ஒளிவிலக்கே

ஓடும் நதியே.. வெல்லும் மதியே மரத்தின் இலையே...


நட்பின் மழையே உயிரின் ஊற்றே...

உற்சாகத்தின் உயர்வே உயர்வின் வியர்வே...

வியர்வைத் துளியே.. துளியின் முத்தே..!! 

அமுதக்கடலே!!!! வாழ்க்கையின் 

வட்டத்தில் நட்பு ஒரு ஆரம் நட்பு..

நன்றி -கிருஷ்ணா

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments