தமிழ் கவிதை இதுவும் காதலே!!! (Tamil Kavithai Ethuvum Kadhalaa )

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை இதுவும் காதலே

தமிழ் கவிதை இதுவும் காதலே!!!
அன்பாய் அருகிருந்து 
அங்கம் முழுவதும்
ஆசையுடன் ஆரத்தழுவி
இனிமையாக உறவாடி
உச்சி முதல் பாதம் வரை
உன் சுவாசத்தை நேசித்து

ஊரறிய மாலையிட்ட உன்னை
எனக்கே எனக்காய் 
ஏகமனதுடன் ஏற்று
இனிதே ஆரம்பித்த நம்
காதல் உறவில்
புனிதப் பயணம்

புகும் நேரமதில்...
உன் அங்கங்கள் முழுவதும் நானும்
என் அங்கங்கள் முழுவதும் நீயும்
என இட்டுக்கொண்ட
காதல் சுவடுகள் மென்மையான
மூச்சுக்காற்றில் முற்றிலும் சூடாக
இறுக்கமாக அனைத்து

இருவர் இதழ்களும்
ஈரத்தை பரிமாறிய நேரத்தில்
உன் சிகைக்குள் சிக்கி சிறையான
என் விரல்கள் விடுபட விருப்பமின்றி!...
விளையாடிக் கொண்டிருக்க 

நம் கட்டில் விளையாட்டில் 
வியர்த்து நனைந்த போர்வை
விடைபெற்றுகொள்ள! 
இறுக பிடித்த இரு கைகள்
இறுதி வரை இணைந்திருக்க 
வரம் வேண்டும்…

நாம் இல்லறத்தில் நல்லறம்
காண்போம் இணைந்தே…

நன்றி - ஆதிமாரிமுத்து தங்கசாமி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments