பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் - Ponniyin Selvan Kathai Surukkam in Tamil

பொன்னியின் செல்வன் கதை சுருக்கமாக

பொன்னியின் செல்வன் திரைப்படம் Ponniyin Selvan Story in Tamil

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.

திரைப்பட விவரங்கள்

பேனர்: லைகா புரொடக்ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ்
படத்தின் பெயர்: பொன்னியின் செல்வன் பகுதி - 1
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

பொன்னி செல்வன் டிரைலர் | Ps 1 தமிழ் | மணிரத்னம் | ஆர் ரஹ்மான் | சுபாஷ்கரன் | மெட்ராஸ் டால்கிஸ்

பொன்னியின் செல்வன் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதின கதை எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.


பொன்னியின் செல்வன் கதை கரு - Ponniyin Selvan Story Tamil

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் Ponniyin Selvan Family Tree

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள்

பின்வருமாறு பொன்னியின் செல்வன் கதை ஆரம்பமாகிறது.

தஞ்சை அரண்மனையில்  நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசன் சுந்தர சோழன் இருப்பதை அறிந்து வடக்கே காஞ்சியில் பகைவர் படை எடுக்காமல் காவல் காத்து வரும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தான் கட்டிய பொன் மாளிகையில் தம் பெற்றோரை அழைத்து தங்க சொல்வதற்கு தம் சிநேகிதன் வந்தியத்தேவன் மூலம் தந்தைக்கு தூது அனுப்புகிறான்… 

வழியில் சோழ பாதுகாவலர் பெரிய பழுவேட்டரையர் தம் ஸ்நேகித சிற்றரரசர்களுடன் சோழ ராஜ்யம் திற்கு தம் மருமகன் உறவு கொண்ட மதுராந்தகனுக்கு பட்டம் கட்டுவது பற்றி ரகசிய உடன்படிக்கை செய்வது தெரிந்து கொள்கிறான்…

மற்றும் தான் கொண்டுவந்த ஓலையை தஞ்சை சென்று சோழ சக்கரவர்த்தியிடம் ரகசியமாக சொல்லும் பொருட்டு காவல்களை தந்திரமாக கையாண்டு மன்னரிடம் கொடுக்கிறான். அதனால் கோட்டை தளபதியின் கோவத்திற்கு ஆளாகிறான்.. மேலும் சக்கரவர்த்தி திருமகள் குந்தவையை சந்தித்து குறுமன்னர்கள் போட்ட ரகசிய பேச்சுவார்த்தை பற்றி கூறுகிறான்..

 ஆபத்தை உணர்ந்த குந்தவை இலங்கையில் இருக்கும் தம்பியான அருள் மொழி வர்மனை கொண்டு வரும்படி வந்தியத்தேவனுக்கு அவன் மேல் கொண்ட நன்மதிப்பால் ஓலை அனுப்புகிறாள்…

வந்தியத்தேவனும் பல இடையூறுக்கிடையே இலங்கையில் ராஜ ரஜனை கண்டு அவரிடம் குந்தவை கொடுத்த ஓலை கொடுத்து அவரை தஞ்சை கொண்டுவர முயற்சிக்கிறார்.. வரும் வழியிலும் பல இன்னல் களை சந்தித்து கோடியக்கரை வருகிறார்கள்.. அச்சமயம் அருள் மொழிக்கு குளிர் சுரம் வந்து விடவே அவரை நாகைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்க்கிறார்கள்..

குந்தவையும் நடந்ததை கேள்வி பட்டு சோழ நாட்டில் நடக்கும் உட்கட்சி பூசலினால் அருள் மொழியை தலை மறைவாக இருக்க சொல்கிறார்..

 இதற்கிடையே வீர பாண்டியன் கொலைக்கு பழி வாங்க ஆதித்த கரிகாலனை சிற்றரசர்கள் முன்னாள் இரகசிய பேச்சு நடந்த சம்புவரையர் அரண்மனைக்கு அவர் கல்யாணம் விஷயமாக பேச்சு நடத்த அவர் முன்னாள் காதலி நந்தினி அழைப்பு விடுகிறாள்… இதை கேள்வி பட்ட குந்தவை வந்தியத்தேவனை கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு கடம்பூர் அரண்மனைக்கு அனுப்புகிறார்.. சென்ற இடத்தில் கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பழி வந்தியத்தேவன் மீது வருகிறது… 

இச்சமயம் ஒரு புயலால் அருள் மொழி வர்மன் வெளிபட மக்கள் அவரை கண்டு கொண்டு நாகை யிலிருந்து தஞ்சைக்கு ஊர்வலமாக யானை மேல் அழைத்து வருகிறார்கள்.. பிறகு பல்வேறு தடைகளுக்கு அப்பால் வந்தியத்தேவனை கொலை பழியில் இருந்து காப்பாற்ற அருள் மொழி வர்மன் பட்டம் சூட சம்மதம் தெரிவிக்கிறார்.. கடைசியில் மகுடம் யாருக்கு சூட்ட படுகிறது? … நந்தினி யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பழுவேட்டரையர் மருமகன் மதுராந்தகன் யார்?

இப்படி சுருக்கமாக சொல்வதை விட அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் ரசனை மிகுந்த எழுத்துக்கள் மூலம் கூறியுள்ளார்.



யார் இந்த குந்தவை பிராட்டியார்.......?

யார் இந்த சேந்தன் அமுதன்.......?

யார் இந்த மணிமேகலை.......?

யார் இந்த அருள்மொழி வர்மன்.......?

யார் இந்த ஆழ்வார்க்கடியன்.....? 

யார் இந்த வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்.......?

யார் இந்த பூங்குழலி.....?

யார் இந்த கருத்திருமன்.....?

நந்தினியின் சாதியாட்டம்

👉பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan Family Tree



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments