யார் இந்த நந்தினி? Who is this Nandini?

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் யார் இந்த நந்தினி?

நந்தினி (கதைமாந்தர்)

நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்து கொண்ட கற்பனை கதாப்பாத்திரமான பழுவூர் இளையராணி ஆவாள்.


நந்தினி கதாபாத்திரத்தின் இயல்பு

நந்தினி வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.


நந்தினியின் சகோதரன்

ஆழ்வார்க்கடியானினுடைய அப்பா மிகப்பெரிய சிவபக்தன் அவர் ஒரு தடவை ஆற்றங்கரையோரம் அனாதையாக கிடந்த ஒரு பெண் குழந்தையை எடுத்து நந்தினி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். 

நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்ததை திருமலை (ஆழ்வார்கடியார்) விரும்பவில்லை. அதன் பின் அவளை சந்திக்கவும் திருமலை (ஆழ்வார்கடியார்) பல நேரங்களில் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சோழப் பேரரசின் முதல் மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் முதன்மை ஒற்றனாக திருமலை (ஆழ்வார்கடியார்) வேலை செய்கிறார்.


நந்தினி மதுராந்தகனுக்கு அரியணை மீது ஆசையூட்டுதல்

கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அரச பதவிகளில் நாட்டம் இன்றி இருந்தவரை நந்தினி சந்தித்து மன்னராகும் தகுதி மதுராந்தகனுக்கே உண்டு என்று மனம் மாற்றம் செய்கிறாள். அதனால் மதுராந்தகன் சிவ பக்தியை துறந்து நாடாள வேண்டி சிற்றரசர்களின் ரகசிய கூட்டத்தினைக் கூட்டுகிறான். அதில் மதுராந்தகன் கலந்து கொள்ள ஏதுவாக தன்னுடைய பல்லக்கினை தருகிறாள் நந்தினி.


ஆதித்த கரிகாலன் கொலை

நந்தினியும் செம்பியன் மாதேவியும் மிகவும் அறிமுகமானவர்கள். இதனால் செம்பியன் மாதேவியின் 3 பிள்ளைகளுடனும் நந்தினி சிறுவயதில் இருந்தே   அரண்மனையில் விளையாடுவாள். இந்த நட்பு பருவ காலத்தில் ஆதித்தனார் கரிகாலனுடன் காதலாக மாறியது. இதை அறிந்த செம்பியன்மாதேவி நந்தினியை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி விட்டாள். ஆதித்த கரிகாலனும் போர் விவகாரங்களில் தீவிரமாக இருந்ததால் நந்தினியை தேடவில்லை.  

அப்படி இருக்கையில் குடிசையினுள்  நந்தினியை வீரபாண்டியனின் மகள் ஸ்தானத்தில் கண்ட ஆதித்த கரிகாலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதுவும் நந்தினி தன் அப்பாவின் உயிர் கருதி ஆதித்த கரிகாலனை வேண்டி நிற்கிறாள். கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையை வெட்டிவிடுகிறார். 

இப்போது சுந்தரசோழன் தனக்கு விசுவாசமான தளபதி பராந்தக வேளாணை கொன்றதற்கு பழி தீர்க்க தனது இளைய மகனான ராஜராஜ சோழன் தலைமையில் ஒருபெரிய படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இவர்களுக்கு பாதுகாப்பாக கொடும்பாளூர் சிறிய வேளாணின் சகோதரரான பூதி விக்கிரம கேசரியும் சென்றார். 

தனது தந்தையான வீரபாண்டியனின் மரணத்திற்கு பழி தீர்க்கும் விதமாக நந்தினி சோழ குலத்திற்கு முதுகெலும்பாக, அரசருக்கு அடுத்த நிலையில் இருந்த 60 வயதுக்கும் மேலான பழுவூர் பெரிய பழுவேட்டரையரை தன் அழகால் மயங்கி அவருடைய ஆசை நாயகியாக மாறினாள். அவரும் அவருடைய அனைத்து பேச்சையும் கேட்டு அதன்படியே நடப்பார்.

சுந்தரசோழன் நோய்வாய்ப்பட்டு 3 வருஷமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இந்த இடைவெளியை பயன்படுத்திய நந்தினி பெரியணை பழுவேட்டரையரிடம் சுந்தர சோழனுக்குப் பின் அரியணை ஏறும் தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறி அவரது மனதை மாற்றிவிடுகிறாள். அதுவும் நாம் நேரடியாக ஆட்சியில் கை வைக்காமல் மறைமுகமாக சில காய்களை நகர்த்துவதன் மூலம் ஆட்சியில் அமரலாம் என்று சில தந்திர யோசனைகளையும் கூறினாள். அதன்படி அரியணை மீது எந்த ஆசையும் இல்லாத மதுராந்தகனை அரியணை மீது ஆசை பட வைக்க பெரிய பழுவேட்டரையரின் தம்பியான சிறிய பழுவேட்டரையரின் மகள் மதுராந்தகருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இவ்வாறு சோழ வம்சத்தை பலிதீர்க்கும் நோக்கத்துடன் சரியான நாளுக்காக கத்திரக்கிறால்

அவ்வாறு ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை வரவைக்கின்றாள். அங்கே மணிமேகலைக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் திருமணம் செய்துவைக்கவே அழைத்திருப்பதாக ஏமாற்றுகிறாள். வேட்டை மண்டபத்திற்கு ஆதித்த கரிகாலனை அழைத்து வந்து கொலை செய்கிறாள். அதற்கு முன் மணிமேகலையையும், வந்தியத்தேவனை அங்கே ஒளிந்துகொள்ளும்படி செய்கிறாள். பெரிய பழுவேட்டரையர் ஆதித்தகரிகாலனை கொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்து தடுக்க முற்பட்டு மயக்கமிட்டு விழுகிறார். அவரை பாண்டிய ஆபத்துதவிகளை தூக்கிவர செய்து மூன்று நாட்கள் உணவளித்து மயக்கமாக இருந்தவரை தெளிவித்து அவரிடமிருந்து விடைபெற்று மறைந்துவிடுகிறாள்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments