கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை தமிழன்னை
எண்ணங்களை எழுத்தாக்கினேன்...
உணர்ச்சியை உயிரெழுத்தாக்கி ...
உடலை (மெய்) மெய்யெழுத்தாக்கி...
உடலையும் உயிரையும் இணைத்து
உயிர் மெய்யாக இருக்கும் எனது தமிழே...!
வாழ்க...வாழ்க... வாழ்க..!
ஓலியாய் பிறந்து...
உணர்வாய் வளர்ந்து...
ஓவியமாய் இருந்து...
காவியமாய் திரிந்து...
கல்வெட்டாய் கடந்து...
உயிர்மூச்சாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
செம்மொழியான தமிழ் மொழியே...!
நீ சிற்பமனாய்...
நான் சிற்பியானேன்..!
நீ எழுதானாய்...
நான் வார்த்தையானேன்..!
நீ ஒவியமானாய்...
நான் ஒவியனானேன்..!
நீ கவிதையானாய்...
நானே கவிஞனுமானேன்...!
நன்றி - த. நி. கங்கா
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments