கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை வாழ்க்கை
உன் வரவை எதிர்பார்த்து
விழிகளிரண்டையும்
வழியில் வைத்துக் காத்திருக்கிறேன்..
கால்கள் தள்ளாடி வருகிறாய்
என் விழிகளை மிதித்து...
எப்போதும் இப்படித்தான்
நான் மலர்களைக் கேட்டால்
நீ தருவது முட்களைத்தான்
சோலைக்குள் செல்ல நினைத்து
உன் கைப்பற்றி வலம் வந்தேன்
பாலைவனத்துக்குள் அழைத்துச்
செல்லும் உன் கரங்களை
உதறிவிட மனமில்லை
கல்லாயிருக்கும் உன் இதயத்தில்
கருணை மலர்கள் பூக்கும்
என்ற நம்பிக்கையில்
விழிகளிரண்டையும்
வழியில் வைத்துக் காத்திருக்கிறேன்...
நன்றி - Umadevi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments