கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை அன்புள்ள தமிழ் ஆசிரியர்
தமிழ்ச்செல்வி என்னும் பெயர் கொண்ட
தேன் தமிழ் சிந்தும் தமிழாசிரியரவர்
பனிரெண்டாம் வகுப்பில் பயின்ற போது
முதல் மொழிப் பாடம் எடுக்க வந்து!
பனிரெண்டே நாட்களில் பாலும் தெளிதேனும்
ஊரும் செந்தமிழை சங்கத் தமிழ் மூலம்
சந்தம் இசைத்து சிங்கப் பெண்ணாய்
பொங்கும் மொழியால் என்னைக் கவர்ந்ததோடு
இன்னும் இருக்கும் செந்தமிழை கற்றுத்தேர்ந்திட
வேண்டுமென்றால் தரணி போற்றும்
நற்றமிழினைப் பயின்று நீ தமிழாசிரியர்
ஆக வேண்டுமென்றார்…
உடன் பயின்றோர் யார்காதிலும்
விழந்ததோ? இல்லையோ?
நான் சுவைத்தேன் இன்பத்தமிழை
ஆ(அ)வளுடன் இன்று நானும்
ஒரு கவி பாடும் தமிழசிரியனாய்
பேரின்பம் கொள்கின்றேனே…
பொங்கு தமிழ் சந்தமென வந்து
இன்பந்தரும் தேன் தமிழைத் தந்து
மங்கையவள் செந்தமிழைப் பயின்று
மங்காத புகழ் அதனை பெற்றேனே…
கங்கை முதல் காவிரி வரை பாயும்
கரைகானா புது வெள்ளம் போலே
புதுப்புனலாய் நுழைந்தாலே என் நெஞ்சில்
சங்கத் தமிழ் தாரகையான பாவை அவளே…
தாய்மொழியாய் வந்த தமிழால்
கவிபாடும் திறம் தந்தவள் தானே
எந்தன் தமிழாசியை தமிழ்ச்செல்வி
என்னும் தமிழ்+அம்மா அவர்களே…
நன்றி - முனைவர் அ.ஞானவேல்
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments