புவியின் உள்கட்டமைப்பு - Earth's infrastructure
புவியின் உட்பகுதி மற்ற திட கோள்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் (பாய்வு) பண்புகளின் திடப்பொருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது. புவியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கி.மீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கி.மீ. வரையிலும் உள்ளது. புவியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; நிலவியல் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வளையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது. உட்கருவானது மற்ற புவியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது
ஆழம் கி.மீ |
புவியின் பல்வேறு அடுக்கு |
0–60 |
லித்தோ அடுக்கு |
0–35 |
மேல் ஓடு |
35–60 |
மேல் மூடகம் |
100–700 |
மூடகம் |
35–2890 |
அஸ்த்னோ அடுக்கு |
2890–5100 |
வெளிக்கருவம் |
5100–6378 |
உட்கருவம் |
- பூமியின் மொத்தம் பரப்பளவு = 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீட்டர் .
- நிலப்பரப்பு = 14 கோடியே 84 இலட்சத்து 29 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்.
- சுற்றளவு = 40 இலட்சத்து 7 ஆயிரத்தி 502 கிலோ மீட்டர்.
- குறுக்களவு = 12756 கோடி கிலோ மீட்டர்.
- நீர்பரப்பு = 40 இலட்சத்து 7 ஆயிரத்து 502 கிலோ மீட்டர்.
- நிலப்பகுதி = 29.2 விழுக்காடு.
- நீர்ப்பகுதி = 70.8 விழுக்காடு
- கடலின் பரப்பளவு = 361 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
- துருவப் பகுதியின் விட்டம் = 12714 கிலோ மீட்டர்.
- சூரியனில் இருந்து பெறும் ஒளியின் அளவு = 1 சதுர கிலோ மீட்டருக்கு 1 கிலோ வோட்ஸ்.
- சுழலும் வேகம் = 1 மணிக்கு 107000 கிலோ மீட்டர்
- தன்னைத் தானே சுற்றும் வேகம் = 23 மணிகள், 56 நிமிடங்கள், 04 வினாடிகள்.
பூமியின் நிலப்பலகைத் தட்டு
மிகவும் இறுக்கமான புவியின் மேல் பரப்பு, லித்தோ அடுக்கு எனப்படும் இது, நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. இந்தத் தட்டுகள் இறுக்கமான அமைப்புகளைக் கொண்டது மேலும் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையே குறுகும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள், பலகைகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாம். இந்த செயல்களால் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள் உருவாகுகின்றன.[68] நிலப்பலகைத் தட்டுகள் அசுதனோ அடுக்கின் மேல் நகர்ந்துச் செல்கின்றது, அதாவது இவ்வடுக்கின் பாகு நிலையிலுள்ள ஆனால் திடமான மேல் மூடகத்தின் பகுதிகள் நிலப்பலகைத் தட்டுகளுடன் நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாய் உள்ளது,[69] மேலும் இவற்றின் இயக்கம் புவியின் மூடகத்தின் உள்ளே ஏற்படும் இயக்க மாதிரிகளை சார்ந்தே அமைகின்றது.
நிலப்பலகை தட்டுகள் கோளின் மேற்பரப்பில் நகர்வதால், குறுகும் எல்லைகளில் உள்ள பெருங்கடல் தரைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகின்றது. அதே சமயம், தட்டுகளில் விலகு எல்லைகளால் மூடகப் பொருட்கள் வெளியேறி நடுப் பெருங்கடல் அகழிகள் உருவாகின்றன. இந்த இரு செயல்களாலும் பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு தொடர்ச்சியாக மூடகத்தோடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது. இந்த மீள் சுழற்சியால், பெரும்பாலான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. உலகிலேயே பழமையான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு சராசரியாக 200 மில்லியன் ஆண்டுடையது.[70][71] இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில் பழமையான கண்டங்களின் மேலோடு 4030 மில்லியன் வருடம் பழமையானது.
மற்ற முக்கிய தட்டுகள், இந்தியத் தட்டு, அரேபியத் தட்டு, கரீபியத் தட்டு, தென் அமெரிக்காவின் வடகரையில் இருக்கும் நாசுகாத் தட்டு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுகோசியத் தட்டு என்பனவாம். ஆஸ்திரேலியத் தட்டு இந்தியத் தட்டுடன் 50 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இணைந்தது. பெருங்கடல் தட்டுகளிளே மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவை, இதில் கோகோசுத் தட்டு வருடத்தில் 75 மீட்டரும்[73] மற்றும் பசிபிக் பெருங்கடல் தட்டு ஆண்டிற்கு 52–69 மி.மீ. வரையிலும் நகர்கின்றன. மறுபுறத்தில் மிகவும் மெதுவாக நகரும் தட்டுகளில் யுரேசியன் தட்டு ஆகும், இது வருடத்திற்கு 21 மீட்டர் தூரம் நகர்கின்றது.
பூமியின் மேற்பரப்பு
பூமியின் நிலம் இடத்திற்கு இடம் மிக வேறுபட்டுள்ளது. பூமியின் மேற்பகுதி 70.8%[75] நீரினால் சூழப்பட்டுள்ளது மேலும் கண்டங்களின் அடுக்குப் பகுதிகள் கடலுக்கடியே உள்ளன. நீரால் மூழ்கப்பட்ட இடங்களில் மலை போன்ற அமைப்புகள், பூமி முழுவதும் பரவியுள்ள நடுப்பெருங்கடல் மலைத்தொடர், எரிமலைகள்,[52] பெருங்கடல் அகழிகள், ஆழ்கடல் படுபள்ளங்கள், பெருங்கடல் பீடபூமிகள் மற்றும் ஆழமான கணக்கிலடங்கா சமவெளிகள் இவையாவும் அடங்கும். இதைத் தவிர்த்து பூமியின் மீது தண்ணீருக்கு வெளியே உள்ள 29.2% இடத்தில் மலைகள், பாலைவனங்கள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நிலப்பரிமாண அமைப்புகளும் அடங்கும்.
பூமியின் மேற்பரப்பு டெக்டோனிக் செயல்கள் மற்றும் அரித்தலால் காலப்போக்கில் உருமாறிக் கொண்டே இருக்கிறது மேற்பரப்பில் டெக்டோனிக் பலகை நகர்தலால் ஏற்படும் குவிந்த மற்றும் தகர்ந்த அமைப்புகள் மேலும் மழைகளால் (precipitation) சிதைவதும் வெப்ப சுழற்சி மற்றும் ரசாயனங்களாலும் தாக்கப்படுகின்றன. பனியாறு உருவாதல், கடற்கரை அரிப்பு, பவளப்பாறைகள் ஏற்படுதல் மற்றும் பெரும் விண்கற்களின் தாக்கம் ஆகியவற்றாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றியமைக்கப்படுகின்றது.
கண்டங்களின் மேலோடு குறைந்த திண்மத்தையுடைய தீப்பாறைகள், கிரானைட் மற்றும் அன்டிசைட்களால் (andesite) ஆனது. பசால்ட் எனப்படும் அதிக திண்மத்தைக் கொண்ட தீப்பாறைகள் அரிதாக காணப்படுகின்றன.[77] மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். படிவுப்பாறைகள் வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது. பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் உருமாறிப்பாறைகள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (pyroxene) மற்றும் ஒலிவைன் (olivine) ஆகும். பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் கால்சைட்டு (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட்டு மற்றும் டோலோமைட்டு ஆகும்.
புவியில் எல்லாவாற்றிற்கும் மேலே உள்ள பரப்பு பீடோ அடுக்கு (pedosphere). இது மண்ணால் ஆனது மற்றும் இது மண் உருவாகும் செயலுக்கும் உட்பட்டது. இது லித்தோ அடுக்கு, வளிமண்டலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளத்திற்கு இடையே உள்ளது. தற்போதைய நிலையில் பூமியின் மேற்பரப்பில் 13.31% மட்டுமே காற்றோட்டமான நிலமாகும் மற்றும் இதில் 4.71% இல் மட்டுமே நிரந்தர விவசாயம் செய்ய ஏற்றதாக இருக்கிறது.[6] பூமியின் நிலப்பரப்பில் 40% இடம் விவசாயத்திற்கும், மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்படுகின்றது, அதாவது, தோராயமாக விவசாயத்திற்கு 1.3×107 கிமீ² நிலமும், மேய்ச்சலுக்கு 3.4×107 கிமீ² நிலமும் பயன்படுத்தப்படுகின்றது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து நிலத்தோற்றத்தைக் காணும் போது மிகவும் தாழ்வான இடம் −418 மீ ஆழத்தில் உள்ள சாக்கடல் (Dead Sea), மற்றும் 2005 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிகவும் உயரமான இடம் 8,848 மீட்டர் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆகும். நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 840 மீட்டர் ஆகும்.
பூமியப்பற்றிய விளக்கம்.
- பூமி சூரியனிலிருந்து 3 வது கோள் ஆகும்
- பூமியில் தான் பால்லாயிரம் உயிர்கள் வாழ்கின்றன
- புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது
- பூமியின் வயது – 460 கோடி வருடங்கள்
- பூமியின் நிலப்பரப்பு -29 % நீர் -71%
- பூமியின் மொத்த பரப்பளவு -509.7 மில்லியன் சதுர கி .மீட்டர்
- மேற்பரப்பில் காணப்படும் முக்கிய தனிமம் ஆக்சிஜன் – 46.6%
- புவியின் சராசரியின் வெப்பநிலை -14 டிகிரி செல்சியஸ்
- சூரிய கதிர் வீதி தளத்திலிருந்து பூமி அச்சின் சாய்வு -23 ½ டிகிரி
- சூரியனை சுற்றும் வேகம் -29.8 கி.மீ /விநாடி
- சூரியனிடமிருந்து புவியின் சராசரி தூரம் -150 மில்லியன் கி.மீ
- சூரியனிடமிருந்து புவியின் அதிகபட்ச தூரம் – 152 மில்லியன் கி.மீ
- சூரியனிடமிருந்து புவியின் குறைந்தபட்ச தூரம் – 147 மில்லியன் கி.மீ
- பூமியின் அப் ஹீலியன் தூரம் நாள் ஜூலை 2 மற்றும் ஜூலை 5 க்கு இடையில்
- நிலநடுக்கோட்டு சுற்றளவு -40,067 கி.மீ
- பூமியின் துரவ பகுதி சுற்றளவு -40,000 கி.மீ
- பூமியின் சமநிலை நாட்கள் – மார்ச் 21, செப்டம்பர் 23
- பூமியின் மையபகுதி – திட உள்ளகம்
- திட உள்ளகத்தை சுற்றி புற கூடு அமைந்துருக்கும்
- பூமியின் கவச போர்வை வளிமண்டலம்
- வளிமண்டல அடுக்குகள்
- டிரபோஸ் பியர்
- ஸ்ட்ர டோஸ்பியர்
- மீசோஸ் பியர்
- அயனோஸ் பியர்
- வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு : டிரபோஸ் பியர்
- டிரபோஸ் பியர் வெப்பச்சாய்வு – 6.4 டிகிரி செல்சியஸ் / கி.மீ
- டிரபோஸ் பியரின் தடிமன் நிலநடுக்கோட்டில் 16 கி.மீ , துர்வத்தில் 8 கி.மீ
- ஸ்ட்ர டோஸ்பியர் டிரபோஸ் பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ வரை பரவி உள்ளது
- ஸ்ட்ர டோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வேப்பச்சீர் அடுக்கு
- ஸ்ட்ர டோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்துள்ளது
- வளிமண்டல அடுக்குகளிலேயே குளிற்சியானது மீசோஸ் பியர்
- அயனோஸ் பியர் தகவல் தொடர்பு பர்மாற்றதுக்கு பெரிதும் உதவுகிறது
- அயனோஸ் பியர் மீசோஸ் பியருக்கு மேலே சுமார் 600 கி /மீ வரை நீள்கிறது
- வளிமண்டலத்தில் வெளியடுக்கான எக்சோஸ் பியர் 9600 கி /மீ வரை நீள்கிறது
- வளிமண்டலத்தில் சுமார் 85 முதல் 400 கி /மீ வரை நீள்வது தெர்மோஸ் பியர்
- எக்சோஸ் பியரின் வெளிப்பகுதி மேக்னட்டோஸ் பியர்
- 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் வரை வைர மோதிர சூர்யகிரகனம் எற்பட்டது .
- வைர மோதிர சூர்யகிரகனம் சந்திரன் அபோஜியில் இருக்கும் போது ஏற்படும்
- பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வருவதால் ஏற்படுவது சூரியகிரகண
0 Comments