துட்டகைமுனு மன்னன் Tuttakaimunu Mannan

துட்டகைமுனு மன்னன் யார்?

மகாவம்சத்தின் காவியத் தலைவன் துட்டகைமுனு

துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்கள வழக்கில் துடுகெமுனு) என்பவன் இலங்கை வரலாற்றில் கி.மு. 161 முதல் கி.மு. 137 வரை ஆட்சி செய்ததாக மகாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசனாவான். இவனே அனுராதபுரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் அரசனான எல்லாளனுடன் போரிட்டவனாவான்.

இவனை, சிங்கள அரசனாகவும், மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் பௌத்தம் பரவுவதற்கு காரணமானவனாகவும் மகாவம்சம் இவனை போற்றி புகழ்கிறது.

வரலாற்று மூலாதாரங்களில் விரிவான முறையில் பிரஸ்தாபிக்கப்படுகின்ற துட்டகைமுனு மன்னன்.

இலங்கையின் 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியை தொடர்ச்சியாக பட்டியற்படுததப்பட்ட ஒரே வரலாற்று இலக்கிய நூல்  மகாவம்சம் ஆகும். இலங்கையின் முதலாவது ஆரிய மன்னனான விஜயனில் தொடங்கி மின்னேரியா குளத்தை நிறுவிய மஹாசேனன் வரையான மன்னர்களின் வரலாற்றை மிக சிறப்பாக முன்வைக்கும் மஹாவம்சம் இலங்கையில் உருவான ஒரு சிறப்பான பாளி இலக்கிய நூலாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான காவியங்கள் தங்களுக்கென ஒரு பாட்டுடைத்தலைவனை கொண்டிருப்பது போல மகாவம்ச காவியமும் தனக்கென ஒரு காவியத்தலைவனை கொண்டிருக்கிறது. அவ்வாறய மகாவம்சத்தின் காவியத் தலைவன் துட்டகைமுனு ஆவான். 

அனுராதபுர இராச்சியத்தின் மன்னன் துட்டகைமுனு.

அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் துட்டகாமினியும் ஒருவராவார் காவன்தீசனுக்கும் விகாரமாதேவிக்கும் மகனாக பிறந்த இவரது ஆட்சிக்காலம் கி.மு 161- கி.மு 137 வரையிலான காலப்பகுதி ஆகும். இவன் வரலாற்றை அறிய உதவுகின்ற பிரதானமான நுல் மகாவம்சம் ஆகும்;. 37 அத்தியாயங்களை கொண்ட மகாவம்சத்தில் 11 அத்தியாயங்கள் துட்டகாமினியின் வரலாற்றை குறிப்பிடுவதோடு அதில் நான்கு அத்தியாயங்களில் அரசியல் பணிகள் பற்றியும் ஏழு அத்தியாயங்கள் சமயப்பணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இம்மன்னனின் ஆட்சி சிறப்பு பற்றி நோக்குவோம்.

துட்டகைமுனுவின் அரசியல் பணி பற்றி நோக்கும்போது அநுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளனை தோற்கடித்து அநுராதபுரத்தை மீட்டது ஆகும். அந்தவகையில் இது தொடர்பாக விரிவாக நோக்கின் சிறுவயதில் இருந்தே எல்லாளனுக்கு எதிரான ஒருவனாக துட்டகைமுனு வளர்க்கப்பட்டான் இவன் பிறக்கும் போது பல அதிசயங்கள் இடம்பெற்றதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. கடலில் வெள்ளையானை ஒன்று நீந்தி வந்ததாகவும் மாலுமிகள் இன்றி கப்பல்களும் தங்கங்களும் வந்ததாகவும் இவர் பிறந்தசெய்தி கேட்டு பல கோடி பௌத்தபிக்குகள் இவரை பார்த்து இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவையும் கைப்பற்றி இணைத்து ஆளும் திறமை படைத்தவர் என பிக்குகள் கூறியதாக மகாவம்சம் கூறுகின்றது.

இளமைக்காலத்தை அடைந்த துட்டகைமுனுவிடம் காவன்தீசன் மூன்று உறுதிமொழி கேட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

• தேரவாத பௌத்த சமயப்பணிகள் ஆற்றுதல் வேண்டும்
• தம்பியாகிய சத்தாதீசனுடன் சண்டையிடக்கூடாது.
• அநுராதபுரத்தில் உள்ள எல்லாளன் மீது போர் செய்யக்கூடாது.

 முதல் இரண்டு வரங்களையும் ஏற்றுக்கொண்ட துட்டகைமுனு மூன்றாவது வரத்தை மறுத்ததோடு தந்தையோடு முரண்பட்டுக்கொண்டு மலையகத்தில் உள்ள கொத்மலைக்கு சென்றான்.  சில காலங்களின் பின்னர் மகாகமையை தலைநகராகக்கொண்ட உருகுணையைக் கைப்பற்றி பின்னர் அநுராதபுரம் மீது படையெடுத்து எல்லாளனையும் தோற்கடித்து அநுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துள்ளான்.

மேலும் துட்டகைமுனு மன்னனின் சமயப்பணி பற்றி நோக்கின் 89 விகாரைகளை அமைத்ததாகவும் அதில் ரூவன்வெலிசாய பிரபல்யமான விகாரையாக கருதப்படுகின்றது.மிருசவெட்டிய விகாரை  மற்றும் லோகமகாபாய எனும் கட்டடமும் இவரால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துட்டகைமுனு அநுராதபுரத்தில் அரசியல் மற்றும் சமய பணிகளை மேற்கொண்டுள்ளான்.

 துட்டகைமுனு என பெயர் வரக் காரணம்

இவன் எல்லாளனுடன் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடையே வளர்ந்தான். இவன் சிறிது பெரிதானதும் தனது தந்தையிடம் முதல்முறையாக "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான்.அ தற்கு அவனது தந்தை இப்பொழுது உன்னால் எல்லாளனுடன் போர் செய்ய முடியாது என்றார். சிறிது காலத்தின்பின் இரண்டாவது முறையாக தனது தந்தையிடம் "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான். அவனின் தந்தை திரும்பவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறையாகக் கேட்ட பொழுதும் அவனது தந்தை அதே பதிலளித்ததால் அவன் தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களை அனுப்பி "நீ ஒரு கோழை என்பதாலையே பெண்களைப்போல் பயப்படுகின்றாய். இதை அணிந்து கொண்டிரு" என்று கூறிவிட்டு மலை நாட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் இந்த இழிய செயலை செய்ததால் அவனுடைய பெயரில் துட்ட என்ற பெயரை சேர்த்து துட்டகைமுனு என்று அழைத்தனர்.

எல்லாளனுடனான போர் எவ்வாறு காணப்பட்டது

எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகமுனுவின் படைகள் எல்லாளன் படையிடம் தோற்று பின்வாங்க ஆரம்பித்தன , போரில் தோல்வியை தவிர்ப்பதற்காக துட்டகைமுனு சாதுரியமாக, எல்லாளனை ஒற்றைச்சமருக்கு அழைக்க, யுத்த தர்மத்தின் படி எல்லாளனும் அதை ஏற்று போர் புரிந்தான், நீண்ட நேர சமருக்கு பிறகு, வயோதிகனான எல்லாளனை, துட்டகைமுனு வெற்றிபெற்றான், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி, அவனுக்கு சிலை எழுப்பி, மரியாதை செய்தான்.


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments