தமிழ் இலக்கிய வரலாறு புத்தகங்கள் | Tamil Elakkia Varalaru

தமிழ் இலக்கிய வரலாறு புத்தகங்கள்

இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ பொழுதுபோக்காக அல்லது அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உரை நடை வடிவிலோ கவிதை வடிவிலோ அமையலாம். அத்துடன், இவற்றுள் அடங்கியுள்ளவற்றைப் பயனாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பயன்படும் இலக்கிய நுட்பங்களின் வளர்ச்சியையும் இது குறிக்கும். எல்லா எழுத்துக்களுமே இலக்கியம் ஆவதில்லை. தரவுகளின் தொகுப்புக்கள் போன்ற எழுத்து வடிவங்கள் இலக்கியமாக்கப்படுகின்றது.

இந்தியா

இந்தியர்கள் சுருதி மற்றும் சிமிதி ஆகிய வழிகளின் மூலம் தங்களின் பிள்ளைகளுக்கு தத்துவங்கள் மற்றும் இறையியல் இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். சுருதி என்பது வாய்வழிக் கல்வியாகவும், சிமிதி என்பது அனுபவ கல்வியாகவும் கருதப்படுகின்றது. வேதங்களும் இது போலவே கற்கப்பட்டுவந்துள்ளன. இந்தியாவின் புராணக்கதைகளே எழுதப்பட்ட தத்துவங்களாகக் கருதப்படுகின்றது. இவை அனைத்தும் பழங்கால சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த மொழியாகும். மேலும் வழக்கொழிந்த மொழியான பாளியில் எழுதப்பட்ட புத்த மதம் சார்ந்த நூல்களும் இந்தியாவின் பழங்கால இலக்கியங்களாகும்


இடைக்கால இலக்கியங்கள்

இடைக்கால இலக்கியங்களில் முக்கிய இடங்கள் வகிப்பவை பெருசிய இலக்கியங்கள், ஒட்டமன் இலக்கியங்கள், அரேபிய இலக்கியங்கள், யூத இலக்கியங்கள் ஆகியன முக்கிய இடங்கள் வகிக்கின்றன. கிரேக்கம், லத்தின் போல் அல்லாமல் இந்தியா, சீனா ஆகிய பழம் இலக்கியங்கள் உருவாகிய நாடுகளிலும் இலக்கியங்கள் குறிப்பிட்தக்க வளர்ச்சியை எட்டியது.

தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம்

நூலக எண்     - 13448

ஆசிரியர் -   செல்வநாயகம், வி.‎

நூல் வகை     - இலக்கிய வரலாறு

மொழி     - தமிழ்

வெளியீட்டாண்டு -   1960

பக்கங்கள்     - XII +260

வாசிக்க

தமிழ் இலக்கிய வரலாறு (110 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் 

தமிழ் இலக்கிய வரலாறு (எழுத்துணரியாக்கம்)

தமிழ் இலக்கிய வரலாறு 1965 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகமாகும்

உள்ளடக்கங்கள்

  • முதற் பதிப்பின் முன்னுரை – வி. செல்வநாயகம்
  • மூன்றாம் பதிப்பின் முன்னுரை – வி. செல்வநாயகம்
  • நூன்முகம்

சங்ககாலம்

  • முச்சங்கங்கள்
  • சங்கச் செய்யுளும் பொருள் மரபும்
  • எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும்
  • சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்

சங்கமருவிய காலம்

  • அரசியல் நிலை
  • பண்பாட்டு நிலை
  • சமய நிலை
  • நூல்கள்
  • உரைநடை இலக்கியம்
  • இலக்கியப் பண்பு

பல்லவர் காலம்

  • பல்லவர் காலத்துத் தமிழ் நாடு
  • சமய நிலை
  • கலை வளமும் இலக்கியப் பண்பும்
  • பக்திப் பாடல்கள்
  • பிற நூல்கள்
  • உரைநடை நூல்கள்

சோழர் காலம்

  • அரசியல் நிலை
  • சமய நிலை
  • இலக்கியப் பண்பு
  • திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும்
  • காவியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • இலக்கண நூல்கள்
  • சைவ சித்தாந்த நூல்கள்
  • உரை நூல்கள்

நாயக்கர் காலம்

  • அரசியல் நிலை
  • சமய நிலை
  • இலக்கியப் பண்பு
  • பிரபந்தங்கள்
  • இலக்கியங்கள்
  • உரையாசிரியர்கள்
  • தமிழை வளர்த்த அரசரும் ஆதீனங்களும்

ஜரோப்பியர் காலம்

  • அரசியல் நிலை
  • சமய நிலை
  • இலக்கியப் பண்பு
  • உரைநடை இலக்கியம்
  • செய்யுள் இலக்கியம்
  • நாடக இலக்கியம்

இருபதாம் நூற்றாண்டு அட்டவணை



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments