கண்ணுக்குள் களமிறங்கி கண்டேன்
காதலென்னும் கோட்டை
உள்ளுக்குள் உறைந்திருக்கும் உன்முகத்தில்
தள்ளாட்டம் கண்டதேனோ?
முன்னாடி சென்றவளை போகவிட்டு
பின்னாடி மகிழ்ந்த நிலை மாறிபோச்சி
கண்ணாடி முன்நின்று முகப்பொலிவை நோட்டமிட்டே
எண்ணத்தில் ஓடவிட்ட இறந்தகால நினைவுகளே!
ஒருபோதும் ஓய்ந்ததில்லை
ஓயாமல் இருந்ததில்லை
எப்படி எப்படி பார்த்த முகம்
இப்படி மாறிபோனாலும்
அப்படியே இருந்ததல்லவா
உன்மிதுள்ள எனது காதல்!
நன்றி - சௌ.சீனிவாசன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments