திருக்குறள் கடவுள் வாழ்த்து தொடக்கம் ஊடல் உவகை வரை 133 அதிகாரங்கள்.
திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு தொடக்கம் ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் வரை 1330 திருக்குறள்.
இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளையும் விளக்கத்தையும் முழுமையாக படிக்கலாம்.
சாலமன் பாப்பையா உரை, கலைஞர் உரை, திருக்குறளுக்கு உரை எழுதியோரில் பரிமேலழகர் உரையே தலைசிறந்ததாகும். அனைத்தும் ஒரே பதிவில் தரப்பட்டுள்ளது.
திருக்குறள் என்பது அதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்". இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதித் "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது.
திருக்குறளின் பிரிவுகள்
அறத்துப்பால்
பாயிரம்
இல்லறவியல்
👉006. வாழ்க்கைத் துணைநலம்
👉007. மக்கட்பேறு
👉008. அன்புடைமை
👉009. விருந்தோம்பல்
👉010. இனியவை கூறல்
👉011. செய்ந்நன்றி அறிதல்
👉012. நடுவுநிலைமை
👉013. அடக்கம் உடைமை
👉014. ஒழுக்கம் உடைமை
👉015. பிறன் இல் விழையாமை
👉016. பொறை உடைமை
👉017. அழுக்காறாமை
👉018. வெஃகாமை
👉019. புறங்கூறாமை
👉020. பயனில சொல்லாமை
👉021. தீவினை அச்சம்
👉022. ஒப்புரவு அறிதல்
👉023. ஈகை
👉024. புகழ்
துறவறவியல்
👉026. புலால் மறுத்தல்
👉027. தவம்
👉028. கூடா ஒழுக்கம்
👉029. கள்ளாமை
👉030. வாய்மை
👉031. வெகுளாமை
👉032. இன்னா செய்யாமை
👉033. கொல்லாமை
👉034. நிலையாமை
👉035. துறவு
👉036. மெய் உணர்தல்
👉037. அவா அறுத்தல்
👉038. ஊழ்
பொருட்பால்
அரசியல்
👉039. இறைமாட்சி
👉040. கல்வி
👉041. கல்லாமை
👉042. கேள்வி
👉043. அறிவுடைமை
👉044. குற்றம் கடிதல்
👉045. பெரியாரைத் துணைக்கோடல்
👉046. சிற்றினம் சேராமை
👉047. தெரிந்து செயல்வகை
👉048. வலி அறிதல்
👉049. காலம் அறிதல்
👉050. இடன் அறிதல்
👉051. தெரிந்து தெளிதல்
👉052. தெரிந்து வினையாடல்
👉053. சுற்றம் தழால்
👉054. பொச்சாவாமை
👉055. செங்கோன்மை
👉056. கொடுங்கோன்மை
👉057. வெருவந்த செய்யாமை
👉058. கண்ணோட்டம்
👉059. ஒற்றாடல்
👉060. ஊக்கம் உடைமை
👉061. மடி இன்மை
👉062. ஆள்வினை உடைமை
👉063. இடுக்கண் அழியாமை
அங்கவியல்
👉064. அமைச்சு
👉065. சொல்வன்மை
👉066. வினைத்தூய்மை
👉067. வினைத்திட்பம்
👉068. வினை செயல்வகை
👉069. தூது
👉070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
👉071. குறிப்பு அறிதல்
👉072. அவை அறிதல்
👉073. அவை அஞ்சாமை
👉074. நாடு
👉075. அரண்
👉076. பொருள் செயல்வகை
👉077. படைமாட்சி
👉078. படைச்செருக்கு
👉079. நட்பு
👉080. நட்பு ஆராய்தல்
👉081. பழைமை
👉082. தீ நட்பு
👉083. கூடா நட்பு
👉084. பேதைமை
👉085. புல்லறிவாண்மை
👉086. இகல்
👉087. பகை மாட்சி
👉088. பகைத்திறம் தெரிதல்
👉089. உட்பகை
👉090. பெரியாரைப் பிழையாமை
👉091. பெண்வழிச் சேறல்
👉092. வரைவில் மகளிர்
👉093. கள் உண்ணாமை
👉094. சூது
👉095. மருந்து
ஒழிபியல்
👉096. குடிமை
👉097. மானம்
👉098. பெருமை
👉099. சான்றாண்மை
👉100. பண்புடைமை
👉101. நன்றியில் செல்வம்
👉102. நாண் உடைமை
👉103. குடி செயல்வகை
👉104. உழவு
👉105. நல்குரவு
👉106. இரவு
👉107. இரவச்சம்
👉108. கயமை
இன்பத்துப்பால்
களவியல்
👉109. தகையணங்குறுத்தல்
👉110. குறிப்பறிதல்
👉111. புணர்ச்சி மகிழ்தல்
👉112. நலம் புனைந்து உரைத்தல்
👉113. காதற் சிறப்பு உரைத்தல்
👉114. நாணுத் துறவு உரைத்தல்
👉115. அலர் அறிவுறுத்தல்
கற்பியல்
👉116. பிரிவாற்றாமை
👉117. படர் மெலிந்து இரங்கல்
👉118. கண் விதுப்பு அழிதல்
👉119. பசப்பு உறு பருவரல்
👉120. தனிப்படர் மிகுதி
👉121. நினைந்தவர் புலம்பல்
👉122. கனவு நிலை உரைத்தல்
👉123. பொழுது கண்டு இரங்கல்
👉124. உறுப்பு நலன் அழிதல்
👉125. நெஞ்சொடு கிளத்தல்
👉126. நிறை அழிதல்
👉127. அவர் வயின் விதும்பல்
👉128. குறிப்பு அறிவுறுத்தல்
👉129. புணர்ச்சி விதும்பல்
👉130. நெஞ்சொடு புலத்தல்
👉131. புலவி
👉132. புலவி நுணுக்கம்
👉133. ஊடல் உவகை
நன்றி
திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் பற்றி சுருக்கமாக
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி
திருக்குறள் பற்றி ஒரு அறிமுகம்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.
அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"











0 Comments