கிமு 380இல் பண்டுகாபயன் ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது. பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர்.
- சிகிரியா
- கலாவாவி
- புலத்திநகரம்
- மாத்தளை அலுவிகாரை
- கங்காசிரிபுரம்
- செங்கடகல
- குத்தஹாலக
- வனவாகினி நதி
- மினிப்பே அணைக்கட்டு
- ஸ்ரீ ஜெயவரத்தனபுரக் கோட்டை
சிகிரியா
இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Sigiriya / Lion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Mutale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் பின் இது புத்த துறவிகள் தங்குமிடமாக மாறியது.
கலாவாவி
கலா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளை மாவட்ட மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 3வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 11வது பெரிய ஆறாகும்.
புலத்திநகரம்
பொலனறுவை பாலி மொழியில் புலத்திநகரம் என்றும் வடமொழியில் புலஸ்திபுரம் என்றும். அழைப்பர்.
அலுவிகாரை
இது மாத்தளை பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த புனித தளத்தில் கி.மு முதலாம் நூற்றாண்டில் புனித திரிபிடகம் எழுத்து வடிவம் பெற்றது. தற்காலத்தில் காணக்கிடைக்கும் இந்த விகாரையின் கட்டிடங்கள் கண்டி இராசதானி காலத்திற்குரியனவாகும்.
செங்கடகல
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும்.
மினிப்பே அணைக்கட்டு
இலங்கையின் நீண்ட ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்துக்கு அருகில் மகாவலி கங்கையின் நீரை விவசாயத்துக்காக திசைதிருப்பும் மினிப்பே அணைக்கட்டு இங்கு அமைந்துள்ளது. இதில் இருந்து மகாவலி வலதுகரை கால்வாய் ஆரம்பிக்கிறது. மினிப்பேக்கு அருகே இலங்கையின் பெரிய நீரைக்கொண்டுச் செல்லும் நீர்ப்பாலம் அமைந்துள்ளது.
ஸ்ரீ ஜெயவரத்தனபுரக் கோட்டை
ஒரு தாழ்ந்த சதுப்பு நில பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது பல பட்டனங்களை உள்ளடக்கிய போதும், அவையனைத்தும் ஒரு மாநகராக ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகரசபையினால் நிர்வாகிக்க படுகிறது. இதன் மேற்கே கொழும்பு மாநகரும், வடக்கே ஹீன் ஓயாவும், கிழக்கே மஹரகமை நகரசபையும், தெற்கே தெஹிவளை-கல்கிசை மாநகரசபையும் உள்ளன.
0 Comments