சிகிரியா - Sigiriya / Lion Rock

சிகிரியா


இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Sigiriya / Lion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Mutale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் பின் இது புத்த துறவிகள் தங்குமிடமாக மாறியது.

தனது தந்தை தாதுசேனாவை உயிருடன் சுவரில் புதைத்து கொலை செய்தபின் ஆட்சியை கைப்பற்றிய காசியப்பன் அதுவரை தலைநகராக இருந்த அனுராதபுரத்தை கைவிட்டு சிகிரியாவை தலைநகர் ஆக்கினார். 495 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து உதவிகளுடன் மீண்டு வந்து காசியப்பனை வென்ற காசியப்பனின் சகோதரன் மொகலாலன் மீண்டும் அனுராதபுரத்தை தலைநகர் ஆக்கினார். இதன்பின் 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் இது கண்டி இராச்சியத்தின் பாகமானது.

சுமார் 470 மீட்டர் உயரமான இந்த சிங்க வடிவிலான பாறையின் உச்சத்தில் ஒரு அரண்மைக்கு தேவையான எல்லா வசதிகளும் உண்டு. சுற்றாடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை உயரமான இது UNESCOவின் World Herritage Centre தராதரம் பெற்ற ஒரு சின்னமாகும்.

சுமார் 1.5 hectares (15,000 square meters) பரப்பளவு கொண்ட இந்த பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது.


சிகிரியா நுண்ணிய நீர்த் தோட்டம் - Sigiriya Micro Water Garden

சிகிரியா நுண்ணிய நீர்த் தோட்டம்

இந்த “நுண்ணிய” தோட்டம், நீர் மாடங்கள். நீர் நிலையங்கள், முற்றங்கள், நீரோட்டங்கள் என்பவற்றின் நுட்பமானதொரு வலையமைப்பாகும். இத்தோட்டத்தில் நீர் நிலைகளால் சூழப்பட்ட கட்டடங்களைக் கொண்ட ஐந்து கூறுகள் உள்ளன. கூழாங்கற்கள் அல்லது மெருகேற்றப்பட்ட பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட அடித்தளங்களைக் கொண்ட இந்நீர் நிலைகளில் ஆழமற்ற நீர் மெல்ல அசைந்தோடும்.

இத்தோட்டம் பல்வேறு காலகட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டுகளில் அமைக்கப்பட்டு, பின்னர் சுவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டு மீண்டும் காசியப்பன்

காலத்துக்குப் பிற்பட்ட இறுதிக் காலகட்டங்ளில், பெரும்பாலும் 10ஆம் 13ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ளது. இதையொத்த தோட்டமொன்று வடக்கில் மண்ணில் புதைந்து

கிடக்கின்றது. இது தற்போது தெற்கிலுள்ள தோட்டத்தின் "எதிரொலி அல்லது “இரட்டை” ஆகும். சிகிரியா கலாசார முக்கோணக் கருத்திட்டத்தின் கொள்கைக்கிணங்க வடக்கிலுள்ள இத்தோட்டம் அகழ்வாராய்ச்சி செய்யப்படாது எதிர்கால ஆய்வுகளுக்கென விடப்பட்டுள்ளது.


சிகிரியா நீர் மலர்ச் சோலை - Sigiriya Water Flower Garden

சிகிரியா நீர் மலர்ச் சோலை

நீர் மலர்ச் சோலை என்ற பெயரில் குறிப்பிடப்பிடும் சோலைப் பகுதி இலங்கையின் புராதன நீர்த்தொழிநட்பத்தின் விசேடத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டும் ஓர் இடமாபுகும். 

இங்கு நான்கு நீர் மலர்கள் காணப்படுவதோடு சமமான திட்டத்தின்படி ஒரு பக்கற் இரண்டாக அமையக கூடிய வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன. நீர் மலர்கள் தொழிற்படுவதற்காக நீர்பெறப்படுவது இவ்விரு பக்கங்களிலுமமைந்துள்ள கிம்ஹான மாளிகையுடன் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களையும் சுற்றிக் காணப்படும் இரண்டு நீரோடைகளிலுமிருந்தேயாகும். அந்நீரை நீர் மலர்களாக அமைப்பது பூமியில் நிறுவப்பட்டுள்ள நீர் வடிகால்களின் மூலமாகும். நீர் மலர்களின் செயற்பாடுகள் மரியாதை மற்றும் துன்பங்கள் என்ற இலகுவான இரண்டு எண்ணக் கருத்துக்களை அடிப்படையாக் கெண்டதேயாகும். நீர் மெதுவாக ஓடிச் செல்லக் கூடிய விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள. மற்றுமொரு விசேட அம்சம் யாதெனில் ஆழமற்ற நீர்ப்பாதையாகும்.   


சிகிரியா சிலைக் குகை (Sigiriya Statue Cave)

சிகிரியா சிலைக் குகை

ஆரம்ப ஆச்சிரம காலத்தில் பிக்குகள் விடுதியொன்றாக உபயோகிக்கப்பட்ட இக்கற்குகை காசியப்பன் காலத்தின் பின்பு தோற்றிய இரண்டாவது ஆச்சிரம காலத்தில் ஒரு சிலைக்குகையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் முதல் தொட்டிக்கு மேலாக மேலுமொரு தொட்டி வெட்டப்பட்டுச் சாந்து பூசப்பட்டு சிற்பங்கள் வரையப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுக்கள் கி.மு. 3-1 நூற்றாண்டுகளுக்குட்பட்டவையாகும். அதன் மூலம் சொல்லப்படுவது திரி என்னும் தலைவரின் மகனாகிய அபிக்திய என்பவரால் இச்சிலைக்குகை அன்பளிப்புச் செய்யப்பட்டதென்பதாகும். இக் குகைக்குள் சுண்ணாம்புக் கல்லினால் அமைக்கப்பட்டுள்ள சேதமடைந்துள்ள பௌத்த சிலை கி.பி.7-8 நூற்றாண்டுகளைச் சார்ந்ததென்ற அம்சங்களைக் காட்டுகின்றது.


சிகிரியா தரணியகலை குகை - Sigiriya Taraniyakalai Cave

சிகிரியா தரணியகலை குகை


திரு.பீ.ஈ.பீ  அவர்களால் இச் சித்திரத்தைப் பற்றிக் கூறப்பட்ட ஆரம்பக்குறிப்பை முன்கொண்டே இந்தக் குகை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் பிரசித்தமா கியது. இது ஆரம்பகால ஆச்சிரம் யுகத்திற்குரிய பிக்குமார்களின் ஆச்சிரமமாகப் பாவிக்கப்பட்டுள்ளது. சித்திரத்தில் வடிக்கப்பட்ட பெண்களின் உருவங்களின் எஞ்சிய பகுதிகள் இதனுள் காணக்கிடப்பதோடு. அச்சித்திரங்கள். பிரதானமான சித்திரக் குகையிலுள்ள பெண்களின் உருவங்களுடன் சமமானதாகும். ஆனால் முழுமையான உருவத்தைச் சித்திரிக்கும் விதத்தில் இந்த உருவங்கள் சித்திரிக்கப்பட்டிருப்பது விசேடமான இலட்சணமாகும்.

சிகிரியா சிங்கக்கால் முற்றம் - Sigiriya Lion's Yard

சிகிரியா சிங்கக்கால் முற்றம்

சிகிரியாத் திட்டத்தின் மேலும் விசேடமான இடமாவது சிங்கமுற்றத்தின் படிக்கட்டின் அடியில் ஒரு வடக்குத் திசையை முன்னோக்கி அமைந்துள்ள சமவெளி நிலமாகும். பிரதான மாளிகைக்கு நுழையும் வாயிலின் சமவெளியில் அடியில் உள்ள இச் அமைந்துள்ள பல கட்டிடங்களின் சிதைந்து போன சின்னங்களைக் காணலாம். அவற்றிடையே சுண்ணாம்புக் கற்களாற் செய்யப்பட்ட பல்வகை அளவுகளைக் கொண்ட சந்திர வட்டக்கற்கள் மற்றும்  பல பாதுகாப்புக் கற்கள் என்பனவும் காணக்கிடக்கின்றன. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு அகழ்வு என்பனவற்றின் கீழ்  மாளிகையினுள் நுழைவதற்காக வடதிசை வாயிலிருந்து பரந்து செல்லும் படிக்கட்டு வரிசை பற்றியும் தகவல்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளன. முற்றத்திலிருந்து மேலே ஏறுவதற்குச் சிங்கத்தின் வாயைப் போன்று செய்யப்பட்டிருக்கின்றது மேலும் சிங்கத்தின் இருகால்களுமே காணக்கூடியதாக இருக்கின்றது.


சிகிரியாத் தோட்டங்கள் - Sigiriya Gardens

சிகிரியாத் தோட்டங்கள்

சிகிரியாத் தோட்டங்கள் இன்றும் நிலைத்துள்ள ஆசியாவின் ஆகப் பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க தோட்டங்களில் ஒன்று. கற்பாறையின் அடிவாரத்தில் வாடவரிசைத் தோட்டங்களும் எண்ணாடிச் சுவருக்கு இட்டுச் செல்லும் இரு புகழ்பெற்ற படிக்கட்டுகளும் அமைந்துள்ளன. மாடவரிசைத் தோட்டங்களுக்குக் கீழே அவற்றுடன் இரண்டறக் கலப்பனவாகத் தொங்கற்பாறைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றை நீங்கள் உங்களுக்கு நேராகக் கீழேயுள்ள முன்புறத்தில் காண்கிறீர்கள். இங்கிருந்து தூரமாகப் பரந்து காணப்படுவை நீர்த்தோட்டங்களின் மூன்று தெளிவான கூறுகளாகும். தெடுந்தொலைவில் உட்புறக் காய்பரணின் ஒரு பாகத்தையும் இடது. முனைக்கோடியில் உட்புற அகழியின் ஒரு பகுதியையும் நீங்கள் காணலாம்.


சிகிரியா நீர் தேக்கம் - Sigiriya water reservoir

சிகிரியா நீர் தேக்கம்


சிகிரியா ஓவியங்கள் - Sigiriya Paintings

சிகிரியா ஓவியங்கள்

குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

சிகிரியா ஓவியங்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தாதுசேன மன்னனின் மகனான காசியப்பன் மன்னனால் தீட்டப்பட்டது. இங்கு பின்வரும் மூன்று வகையான குகைகள் காணப்படுகின்றன.

  • நாகப்படைக் குகை
  • இருக்கைக் குகை
  • சித்திரக்கூடக் குகை

ஓவியங்கள் யாவும் இயற்கை பாறையின் மேற்பரப்பின் மேல் வெண்களி, சுண்ணாம்பு. முட்டை வெண்கரு, விளாங்காய்ப் பசை போன்றவை கொண்டு சாந்து பூசி, ஈரமாக இருக்கும் போதே ஓவியங்களை வரையப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கிடைக்கப் பெற்ற வெவ்வேறு வகையான இயற்கைத் தாவரங்களில் இருந்து பெறப்பட்ட சாறு போன்றன மூலம் இளம் சிவப்பு, மஞ்சள், நீலம், கபிலம் ஆகிய நிறங்கள் தீட்டப்பட்டுள்ளன. இச்சித்திரங்களுக்கு ஈரத்துடன் நிறம் பூசப்பட்டதால் 'பிரஸ்கோ புவனோ' ஈரச்சுதை, ஈரப்பதமை, ஈரச்சாந்து ஓவியம் என அழைக்கப்படுகிறது. இதுவே இவ் ஒவியம் வரைவதற்கு பயன்படுத்தப்பட்ட நுட்பமுறையாகும். பெண் ஓவியம் யாவும் தாமரைமலர், அல்லி மலர், நீலோற்பல மலர் போன்றவற்றை சூடியும் கைகளில் வைத்துக் கொண்டும், வருடியவாறும் காணப்படுகின்றனர்.

இவ் ஒவியங்கள் குப்த மரபு முறையில் லௌகீக சம்பந்தமான ஓவியங்களாகும். இவ் ஓவியங்கள் இலங்கையின் மிகச் சிறந்த ஓவியங்களாக இருந்தும் இரண்டு சுவர்க் கதைகளைத் தவிர்ந்த இவை பற்றிய இலக்கியக் குறிப்புக்களோ, இத்திகாசக் குறிப்புக்களோ இல்லை. இதனால் இவ் ஓவியங்கள் பற்றி ஆராச்சியாளர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


சிகிரியா ஓவியங்கள் பற்றிய ஆராச்சியாளர்களின் கருத்துக்கள்

  • புதைப்பொருள் ஆராய்ச்சியாளர் 'A.C.B. பெல்' : காசியப்ப மன்னன் அந்தப்புர மகளிர் அண்மையிலுள்ள கோயிலுக்கு செல்லும் காட்சி.
  • விமர்சகர் ஹாவால்' : காசியப்ப மன்னனின் மனைவியர் தேவலோகம் செல்லும் காட்சி.
  • 'கலாநிதி ஆனந்த குமாரசுவாமி' - முகில் கூட்டங்களுக்கு செல்லும் தேவலோக கன்னிகள் (அப்சராக்கள்).... இந்த கருத்தை 'பென்ஜமின் ரொவன்ட்', 'கொன்சின்டன் அகியோரும் இக் கூற்றை ஏற்றுக் கொள்கின்றனர்.
  • புதைப்பொருள் ஆராய்ச்சியாளர் 'கலாநிதி பரண விதான':- மலர்களுடன் கூடிய செந்நிற பெண்கள் மீன் பெண், மலர்த்தட்டு ஏந்தி நிற்கும் கரு நிற நீலப் பெண்களை மேகப் 'பெண்ணும் ஆவர்.
  • விமர்சகர் 'சிங்க அபய சூரிய' : காசியப்ப மன்னனின் இரு புதல்விகளான போதி மற்றும் சத்பலா என்போரை பல வேடங்களில் வரைந்துள்ளார்.
  • 'நந்த தேவ விஜய சேகர' : மங்கோலியப் பெண்களைப் போன்று இப் பெண்கள் காசியப்பனின் ஆட்சியை எண்ணியே இவ்வாறு காணப்படுகின்றனர்.


காசியப்ப மன்னனின் 18 வருட ஆட்சி அவனது தம்பி முகலனால் முடிவுற்றதும் சீகிரியா கைவிடப்பட்டு நாளடைவில் காடு வளர்ந்து மூடிக் கொண்டது. இதன் பின் 1831இல் "மேஜர் பாப்ஸ்" என்பவர் இதனைக் கண்டுபிடித்தார். அப்போது அங்கு இருபது பெண் ஓவியங்களே எஞ்சியிருந்தன. அதற்குப் பின் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக கடமையாற்றிய கிலயல் பெல் என்பவர் உச்சியிலிருந்த அரண்மனையையும் அதற்கு செல்லும் வழியையும் கண்டுபிடித்து சர்வதேச வல்லமைக் கொண்ட சிகிரியாவைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments