இயற்கை வேளாண்மை என்றால் என்ன?
இயற்கை வேளாண்மை (Organic Farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை முறையாகும்.
இயற்கை விவசாயத்தின் முக்கியமான படிகள்
- மண்வளத்தினை அதிகப்படுத்துதல்.
- வெப்பநிலையினை மேலாண்மை செய்தல்.
- மழைநீரை சேமித்தல்.
- சூரிய ஆற்றலை அதிகபட்சமாக சேமித்தல்.
- இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு.
- இயற்கை சுழற்சி முறைகள் மற்றும் உயிர்வாழ் முறைகளை பராமரித்தல்.
- விலங்குகளை ஒருங்கிணைத்தல்.
- புதுப்பிக்கவல்ல ஆற்றல்களை அதிகமாக சார்ந்திருத்தல் (உதாரணமாக விலங்கின ஆற்றல்).
இயற்கை மேலாண்மை என்றால் என்ன?
இயற்கை முறை மேலாண்மையின் மூலம் தேவைக்கு அதிகமாக மூலாதாரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை ஏற்படுத்தாமல், தேவைக்கேற்ப மூலதாரங்களை உபயோகித்து உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை மூலாதாரங்களை சேமித்து வைத்தல்.
தற்போதைய காலகட்டத்தில் படித்த பட்டதாரிகள் கூட விவசாயம் செய்ய அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பழைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை வேளாண்மை (இயற்கை விவசாயம்) முக்கிய பங்கு வகித்தது. பழைய காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு வேளாண்மை பெறும் பங்கற்றியது. அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள். விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.
இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட கழிவுகளை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழிச்சி பசு உரம் மக்கிய குப்பை கால்நடை கழிவுகள் ஆகியவற்றை நிலத்தில் விலையும் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துவது இயற்கை விவசாய முறைமையாகும்.
இயற்கை நமக்கு நிலம், நீர், காற்று ஆகியவற்றை இயற்கை விவசாயம் செய்வதற்கு வழங்குகிறது. பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து நமக்கு கிடைக்கின்றது. இன்று மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சத்தான உணவுப் பொருள்களையும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
தமிழ் மக்கள் பழங்கால வேளாண்மை தொழிலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை தான் விலை விலங்களில் பயிர் செய்து வந்தார்கள். முதன்மை பயிராக பல வகை நெற்பயிர்களாக நடவு செய்தனார்.
செயற்கை விவசாயம் Artificial Farming
செயற்கை உரங்களை நிலத்துக்கு போடுவதால் நிலம் கெட்டுப்போகிறது பிறகு விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை.
செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) கலந்த உணவு பொருள் உற்பத்தி செயப்படுகிறது. இதை உண்ணும் நமக்குக் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
1880 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் முழுமையாக செயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டான். இதன் பாதிப்பு தாய்யின் கருவில் உள்ள குழந்தை முதல் நான் நாட்டின் உள்ள அனைத்து மக்களும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முழுமையாக செயற்கை விவசாயம் செய்ய அரபித்த பின்னர் விலங்குகள் பல உயிர் இழந்துவிட்டது. இயற்கை வளம் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. அரசாங்கம் செயற்கை விவசாயத்தை தடை செய்ய வேண்டும். அப்போது தான் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்.
விவசாயம் செழித்தால் மக்கள் நாம் உணவு சாப்பிட முடியும் நாம் விவசாயத்தை பயிர்த்தொழிலாக நினைக்காமல் உயிரை காக்கும் விவசாயத்தை போற்றுவோம்.
நாம் முன்னோர்கள் விவசாயத்தை இறைவனுக்கு இணையாக போற்றினார்கள் அதன் பாலனாக இயற்கையும் தன்னுடைய செழிப்பை மக்களுக்கு கொடுத்து வளமாக வாழ வைத்தது.
நகரம் என்ற பெயரில் நிலங்களை கட்டடங்களாக மாறி வருகிறார்கள். சுயநலத்திற்காக மரங்களை வெட்டி இயற்கை வளங்களை அளித்து வருகின்றனர். இதன் விலைவாக மழை பொய்த்து விவசாயம் நலிவடைந்து காணப்படுகிறது. விவசாயம் காப்போம்
0 Comments