அணி இலக்கணங்களில் (Ani ilakkanam) சொல்லணி பொருளணி பற்றிய தகவல்கள் மற்றும் கேள்வி வினாக்கள்.
பொருளணி என்பது
அணிகள் சொல்லணி பொருளணி என இரு வகைப்படும்'
சொல்லால் அணி செய்வது சொல்லணி
பொருளால் அணி செய்வது பொருளணி
பொருளணிகள் எத்தனை வகைப்படும்?
35 வகைப்படும்
தன்மையணி என்றால் என்ன?
ஒரு பொருளை உண்மைத் தன்மையை உள்ளது உள்ளவாறு விளக்குவது.
தன்மையணியின் வேறு பெயர்கள் யாவை? தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி
தன்மையணி எத்தனை வகைப்படும்?
4 [பொருள், குணம், சாதி, தொழில்]
உவமையணி என்பது யாது?
ஒப்புமைத் தோன்ற வருவது
தீவக அணி என்றால் என்ன?
ஓரிடத்தில் நின்ற சொல் அல்லது பொருள் செய்யுள் முழுதும் மீண்டும் மீண்டும் பொருந்திப் பொருள் தருவது.
தீவக அணியில் உள்ள தீவகம் என்பது யாது?
விளக்கு அணி
தீவக அணியின் வேறு பெயர் யாது?
விளக்கு அணி
தீவக அணி எவற்றைக் குறித்து வரும்?
குணம், தொழில், சாதி, பொருள்
தீவக அணி எவ்விடங்களில் பொருந்தி வரும்?
முதல் நிலை, இடை நிலை, கடை நிலை
தீவக அணி எத்தனை வகைப்படும்?
12
தீவக அணி எவற்றோடு நடைபெற்றியலும்?
மாலை, விருத்தம், ஒரு பொருள், சிலேடை
பின் வரு நிலையணி என்றால் என்ன?
சொல்லோ பொருளோ செய்யுள் முழுதும் மீண்டும் மீண்டும் வருவது
பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும்?
2 - சொற்பின் வரு நிலையணி, பொருட் பின்வரு நிலையணி, சொற் பொருட்பின் வரு நிலை அணி
முன்ன விலக்கணி என்றால் என்ன?
ஒரு பொருளைக் குறிப்பால் உணர்த்துவது
முன்ன விலக்கணி எக்காலம் சார்ந்து வரும்?
முக்காலம் சார்ந்து 3 வகைப்பம் [இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம்]
முன்ன விலக்கணி எத்தனை வகைப்படும்?
4 [பொருள், குணம், காரணம், காரியம்]
முன்ன விலக்கணியின் விரிவான பாகுபாடுகள் எத்தனை?
13 [ வன்சொல், வாழ்த்து, தலைமை, இகழ்ச்சி, துணை செயல், முயற்சி, பரவசம், உபாயம், கையறல், உடன்படல், வெகுளி, இரங்கல், ஐயம்]
விலக்கணி எவற்றோடு விலங்கித்தோன்றும்?
வேற்றுப்பொருள், சிலேடை, ஏது என்னும் மூன்றோடு விளங்கித் தோன்றும்.
சொல் அணி என்பது.
- எதுகை
- மோனை
- சிலேடை
- மடக்கு
- பின்வருநிலை
- அந்தாதி
எதுகை
செய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
உதாரணம்
- ஒட்டகத்தைக் கட்டிக்கோ
- கெட்டியாக ஒட்டிக்கோ
- வட்ட வட்டப் பொட்டுக்காரி
மோனை
செய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது.
உதாரணம்
- கட்டோடு குழலாட ஆட
- கண்ணென்ற மீன் ஆட ஆட
- பொட்டோடு நகையாட ஆட
- பெண்ணென்ற நீயாடு ஆடு
சிலேடை
ஒரு சொற்றொடரை வேறுவேறு இடங்களில் பிரிக்கும் போது வெவ்வேறு பொருள் தருவது.
உதாரணம்
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனுக்கு நாணாது
இச் செய்யுளில்
ஒரு கருத்து:
நாய் ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும்.
குலைப்பதற்கு நாணாது என்று வரும்.
எதிர் கருத்து
தேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்
குலை போட நாணாது. நாடும்- மனிதர்களால் விரும்பப் படும் என்று வரும்.
இங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது.
தனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது
அறிவில்லாதவன்
அறிவில்+ஆதவன்
அறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.
மடக்கு
ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.
உதாரணம்
அரவம் அரவம் அறியுமா?
இதன் பொருள்
பாம்பு சத்தம் அறியுமா.
ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.
பின்வருநிலை
ஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது
உதாரணம்
நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர் இதன் பொருள்:
துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத்துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர்.
இங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது.
நோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.
அந்தாதி
பாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.
உதாரணம்
- வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
- நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
- நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
- கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
0 Comments