கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை விவசாயி மகளின் போர் குரல்
எங்களின்மூலதனமே
விவசாயின் வியர்வைத்துளி!
எங்களின் செங்கோலே
விவசாயின் ஏர்கழப்பை!
எங்கள் கழனியே
விவசாயின் விருந்தோம்பல்!
மரம்,செடி, கொடி என
நீ மதிக்காமல் சென்றால்!
ஒரு பொழுது உன் நிழல் மிதித்தே
நடக்க வேண்டி வரும்!
நெற்பயிர்கள் தலை நிமிர்ந்து
நிற்கும் வரை!
என் விவசாயிகள் தலை குனிந்தே
வயலில் பாடுபட வேண்டும்!
முற்காலத்தில் வானம் பார்த்து
மழை பொழியும் எனக் கூறிய விவசாயி!
இக்கலியுகத்தில் காணல் நீரில்
தாகம் தணிக்க வேண்டியுள்ளது!
பதவியும், பணமும்
உன் வயிற்றை நிரப்பும் என எண்ணினாயோ!
மண்புழுவினை துட்சமென கருதினால்!
எங்கள் விவசாயம் வளர்ந்திடுமோ!
உங்கள் தொழில் நுட்பமும், கலாச்சாரமும்
இன்னும் எங்கள் விவசாயிக்கி மதி எட்டவில்லையென்றே கூறலாம் !
பதிவின் தேடலுக்காக நீ ஊடகம் நோக்கி ஓடுகின்றாய்!
இயற்கைக்கே கட்டளையிடுகிறது மனித கோட்பாடுகள்!
இல்லையெனில்
விளை நிலங்கள் விலை நிலமாகுமா?
நாங்கள் இயற்கைக்காக
போராடுகின்றோம்!
நீங்கள் செயற்கையை நாடுகின்றீர்கள்!
விவசாயத்தை காப்பாற்றுவோம்!
இயற்கை வளங்களை போற்றுவோம்!
வணக்கம் நண்பர்களே!
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments