ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்
ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுவை சீன இலக்கிய செவ்வியல் நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த தொகுப்பின் சில ஆக்கங்கள் கிமு 1000 வரை பழமையானவை. உலகின் மிகப் பழமையான, செவ்விய படைப்புகளில் இவையும் ஒன்றாகும்.
ஷிழ் சிங் - செய்யுள் செவ்வியல் தொகுப்பு
சுசிங் - வரலாறு செவ்வ்லியல் தொகுப்பு
லி சி - சடங்குகள் செவ்வியல் தொகுப்பு
ஐ-சிங் - மாற்றம் செவ்வியல் தொகுப்பு
Chūnqiū - Spring and Autumn Annals
சீ சிங் நூல்
என்பது சீனத்தின் முதல் நூலாகும். இன்று கிடைக்கும் சீன நூல்களில் மிகத் தொன்மையானது இதுவே. இந்த நூலை ஆங்கிலத்தில் Classic of Poetry என்று அழைக்கின்றனர், இது பெரும்பாலும் மிகச்சிறந்த பாடல்களின் தொகுப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் காலம் கி.மு. 11 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். "ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்" என்னும் பாரம்பரிய நூல்களை கன்பூசியஸ் தொகுத்ததாகக் கூறப்படுகிறது, அதில் இதுவும் ஒன்றாகும். இது ஒரு காலகட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகள் சீனாவிலும் அண்டை நாடுகளிலும் அறிஞர்களால் மனனம் செய்யப்பட்டு, நினைவில் வைக்கப்பட்டிருந்து. பின் எழுத்தால் எழுதப்பட்டன. சிங் அரசமரபு காலத்தில் அதன் ஓசை வடிவங்கள் பழைய சீன ஒலியியல் பற்றிய ஆய்வுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, நூலுக்கு இருந்த திரிபான விளக்கங்கள் மாற்றப்பட்டு பழைய உரை விளக்கங்கள் மீட்கப்பட்டன.
சீ சிங் என்பதில் உள்ள ஷீ என்ற சொல்லுக்குக் கவிதை அல்லது பாடல் என்றும், சிங் எனபதற்கு பல பொருள்கள் உண்டு என்றாலும் இதில் செவ்விலக்கியம் என்ற சொல்லும், தொகுப்பு என்ற பொருளும் முதன்மையானவை. இதன் பாடல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் ஒரு செவ்வியல் மொழி ஆக கருதப்படுகின்றது.
மனித வரலாற்றின் தொடக்ககாலத்தில் ஒரு மொழி என்பது உருவாகி, மிக நீண்டகாலம் பேச்சு வழக்கில் இருந்த பின்னரே, அதற்கான எழுத்து உருவாகிறது. தொடக்ககாலத்தில் ஒருமொழிக்கான எழுத்து உருவாக, மிக நீண்ட நெடியகாலம் ஆகிறது. ஆக தொடக்க காலத்தில் மொழிகளுக்கு எழுத்து உருவாகும் முன்னரே, பாடல் வடிவில் பழமொழிகளும், கதைகளும், புராணங்களும், தொன்மங்களும், மதம்சார்ந்த புனிதப் பாடல்களும், ஓரளவு இலக்கியங்களும் கூட உருவாகி, மொழி ஓரளவு முழு வடிவம் பெற்று விடுகின்றது. எனினும் எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ச்சி அடைந்து செழுமை அடைந்து செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. எழுத்து வடிவம் இன்றி ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இயலாது. கிரேக்கம், இலத்தீன், சீனம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்துமே எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க எழுத்து உருவாவது ஓர் அடிப்படைத்தேவை. ஆனால் அது மட்டும் போதுமானதல்ல. வேறு பல பின்புலங்கள் இருந்தாக வேண்டும்.
செவ்வியல் காலகட்டமே ‘வரலாற்றுகால உயர்நிலைச் சமூகம்’
> ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாக அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் அம்மொழிக்கான சமூகம் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்தாக வேண்டும். ஒரு சமூகத்தின் பல துறையிலும் உயர் வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தைப் பொற்காலகட்டம் என்று வரலாற்றில் குறிப்பிடுவர். நாம் இந்த பொற்காலகட்டம் என்பதை வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகம் எனலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஒரு மிக முன்னேறிய சமூகத்தையே இது குறிக்கும். அதுபோன்ற ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகத்தில் பல துறைகளோடு இலக்கியமும் வளர்ச்சியடைந்து செவ்வியல் தரத்தை அடைகிறது. இதையே வேறு விதத்திலும் குறிப்பிடலாம். ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கான சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு, ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாக அது இருந்துள்ளது என்பதாகிவிடும்.
ஆகவே பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ்வியல் தரமுடைய ஓர் இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது. எனவே வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்களே செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்துள்ளன என்பதுதான் வரலாற்று விதியாக இருந்துள்ளது. செவ்வியல் இலக்கியங்களைப் படைத்த வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
வரலாற்று எடுத்துக்காட்டுக்கள்:
கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கிரேக்க நகர அரசுகளின் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 5ஆம், 4ஆம் நுற்றாண்டுகளாகும். இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது உரோமப் பேரரசின் வரலாற்றுகால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் (சீசர் முதல் மார்க்கஸ் அரேலியஸ் காலம் வரை) கி.மு. 1ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். சமற்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது வைதீக இந்துக்களாலும் இந்திய வரலாற்று அறிஞர்களாலும் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் குப்தர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் காலமான கி.பி. 4ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும். சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது “சௌ” பரம்பரை ஆண்ட சீனாவின் வரலாற்றுகால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 8ஆம் நுற்றாண்டு முதல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும்
தமிழ் ஒரு செவ்வியல் மொழி
இந்த வரலாற்று விதியினை, இந்த வரலாற்றுப் படிப்பினையை, நமது தமிழ் மொழியின் செவ்வியில் இலக்கிய காலகட்டமான நமது சங்ககால கட்டச் சமுதாயத்துக்குப் பொருத்திப் பார்ப்போம். உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும், சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். தமிழின் சங்ககால இலக்கியம் குறித்த ஒரு சில மொழியியல் அறிஞர்களுடைய கருத்துக்களைக் காண்போம். இந்த அறிஞர்கள் அனைவரும் தமிழ், சமற்கிருதம், போன்ற செவ்வியல் இலக்கியங்களையும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற நவீன இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த உலகப் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் ஆவர்.
தமிழ்ச் சமூகம்
நமது வரலாற்று விதிப்படி இவை படைக்கப்பட்ட கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரையான சங்கச் செவ்வியல் காலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த ஒரு சமூகமாக இருந்திருக்க வேண்டும். அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்த காரணத்தால் மட்டுமே இது போன்ற உன்னதமான, உயர் தரமான, உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களைப் படைத்திருக்க இயலும் என்பதே நமது வரலாற்று விதி கற்பிக்கும் பாடமாகும்.
செவ்வியல் மொழிகளும் எழுத்தும்
ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாவதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அம்மொழிக்கான எழுத்து முறை உருவாகி இருக்க வேண்டும் என்பதைப் பிற செவ்வியல் இலக்கியங்களின் வரலாறுகள் நமக்குக் கற்பிக்கின்றன. கிரேக்கச் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 5ஆம், 4ஆம் நூற்றாண்டு என்றால், அதன் எழுத்து கி.மு 8ஆம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது. இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 6ஆம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது-(11).
சீனச் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 15ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றிவிட்டது. சமற்கிருத செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.பி 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதற்கான எழுத்தான அசோகன் பிராமியை, கி.பி 2ஆம் நூற்றாண்டின் நடுவிலேயே பயன்படுத்துவது துவங்கி விட்டது(அசோகன் பிராமி என்பது மௌரிய அரசர் அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை ஆகும். இதன் காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு. இதற்கு முன் இந்திய மொழிகளுக்கு வேறு எழுத்து முறை இல்லை எனக் கருதப்படுகிறது).
சமற்கிருதமும் எழுத்தும்
கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முன் சமற்கிருத மொழிக்கு எழுத்து இல்லை என்றும், கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இன்ன பிற எழுத்துச் சான்றுகள் ஆகிய அனைத்திலும் சமற்கிருதம் இல்லை என்பதும்தான் வரலாற்று ஆய்வு முடிவு ஆகும். இந்தியாவெங்கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக இருந்தன. ஆனால் சமற்கிருதம், அன்றைய காலகட்டத்தில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. கி.பி 150இல் தான் முதல் முதலாக சமற்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கிறது-(12). அந்த சமற்கிருத எழுத்தும் அசோகன் பிராமியில் தான் எழுதப்பட்டது. சமற்கிருதத்திற்கான தென்னிந்திய எழுத்து முறையான கிரந்த எழுத்து கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உருவானதாகும். அதுபோன்றே சமற்கிருதத்திற்கான வட இந்திய எழுத்து முறையான தேவநாகிரி என்பது அதற்குப் பின் நான்கைந்து நூற்றாண்டுகள் கழித்துத் தான் உருவாகியது.
சியார்ஜ் எல் ஆர்ட்
சான்றாக இங்கு ஆறாவது மதிப்புரையை வழங்கிய திரு சியார்ஜ் எல் ஆர்ட் அவர்கள் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருதம் படித்து விட்டு, விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காளிதாசர், மாகா, பாரவி, சிரீஅர்சர், ஆதிசங்கரர் ஆகியவர்களின் நூல்களையும், இரிக்வேதம், உபநிடதங்கள், மகாபாரதம் போன்றவைகளையும் சமற்கிருத மூலத்திலேயே படித்தவர். 1963 முதல் சமற்கிருத மூல நூல்களைப் படிக்கத் தனது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டவர். அது போன்றே கிரேக்க, இலத்தீன் செவ்வியல் நூல்களை, அவைகளின் மூலத்திலேயே நிறையப் படித்தவர். இரசியன், பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நவீன மேற்கத்திய மொழிகளைக் கற்று அவைகளின் இலக்கியங்களையும் விரிவாகப் படித்தவர். நவீன இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பு மூலம் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்-(2).
பெஞ்சமின் கை பாயிங்டன்.
“பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும்பொழுது அவற்றின் மிகுந்த எளிமையைத்தான் நான் முதலில் குறிப்பிட வேண்டும். அந்த எளிமையும் வேறு சில தன்மைகளும்தாம் தமிழ்மொழி அளவிறந்த தொன்மை வாய்ந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழி வரிவடிவத்திலிருந்து (லிபியிலிருந்து) உருவாக்கப்பட்ட கிரந்த லிபியில்தான் தென்னிந்தியாவில் சமற்கிருதம் எழுதப்படுகிறது. தமிழ்மொழி, சமற்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட மொழி அமைப்பைக் கொண்டது. சமற்கிருதம் உருவான காலகட்டத்திலேயே உருவான தொன்மை உடையது.” என்கிறார் பெஞ்சமின் கை பாயிங்டன்-(3).
என்றி ஒய்சிங்டன்.
“செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது. ஆகவே தமிழைத் தென்னிந்தியத்(தொன்) மொழியாகவே கருதலாம்.” என்கிறார் என்றி ஒய்சிங்டன் அவர்கள்-(4).
ஆர்.ஈ.ஆசர்
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ் இலக்கியச் செல்வத்தை விட வளமான இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச்சிறப்பை உலகம் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்புப் பணி தேவை. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம், மனித இனச்சாதனைகளுள் மிகச்சிறந்தவைகளுள் ஒன்று. கருத்துக்கள், இலக்கிய அமைப்பு, சொற்களஞ்சியம் ஆகியவைகளுள் சங்க இலக்கியம், இன்றைய தமிழ்ப் படைப்புலகத்துக்கு ஒரு வற்றாத கருவூலமாக உள்ளது. தங்கள் படைப்பாற்றலை வியக்கத்தக்க அளவுக்கு மேம்படுத்தக் கூடிய செழுமையான பல்துறை வளங்கள் சங்க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன என்பதை இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.” என்கிறார் ஆர்.ஈ.ஆசர்(5).
ஏ.கே. இராமானுசன்.
“தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்தச் சங்க இலக்கிய அகப்பாடல்களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக்கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன: காதலோடு கனிவும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ள உள்ளுறை இறைச்சி, அங்கதம் ஆகியவை; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற வர்ணணை; அடிகள் சில, அவை சுட்டும் பொருளோ பெரிது; தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ்வகப் பாடல்கள்; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” எனச் சங்க இலக்கியத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறார் உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர், இலக்கிய ஆய்வாளர் ஏ.கே. இராமானுசன்(6).
சங்ககாலம் என்பது வீரயுகக்காலம் எனக்கூறிய கைலாசபதி அவர்களின் கூற்றை, ஏ.கே இராமனுசன் அவர்கள், தனது காதலும் வீரமும் பற்றிய கவிதைகள் எங்கிற ஆங்கில நூலின் பின்னுரையில் அதனை மறுக்கிறார். கைலாசபதி ஒரு கவிதையையாவது கவிதையென்ற முறையில் விளக்கமாகப் பார்க்கவில்லையே என்று இராமனுசன் வருந்திக்காட்டுவார்.
பல புறநானூற்றுப்பாடல்கள் மறைந்துவிட்ட ஒரு காப்பியத்திலிருந்து பெறப்பட்ட துண்டுகள் ( FRAGMENTS FROM THE LOST EPIC)) என்ற கைலாசபதியின் கருத்தை மறுக்கும் இராமானுசன் ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலும் கலை நுட்பத்தோடு முழுமை பெற்றவை என்பார்(THE SINGLE POEMS ARE WELL-FORMED AND ARTISTICALLY TO BE FRAGMENTED. ப-294). இவைகளை எடுத்துக்கூறும் முனைவர் ப.மருதநாயகம் அவர்கள், “கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் எஞ்சிய 2209 பாடல்களும் சங்ககாலத்தைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றுள் 1705 அகப்பாடல்களாகும். கைலாசபதியின் கணக்குப்படியும் 391 பாடல்களே வீரர்களையும், வள்ளல்களையும் மற்றையோரையும் குறிப்பவை.
இது சங்கப்பாடல்களில் 70 சதவீதத்துக்கும் மேலானவை வீரர்களைப் பற்றியவையன்று என்பதைத் தெளிவாக்கும். புறநானூற்றுப்பாடல்கள் மதிநுட்பம் நூலோடுடைய பெரும்புலவர்களால் எழுதப்பெற்றவை, அவை வாய்மொழி மரபைச் சேர்ந்தவை அல்ல. மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலை நுணுக்கத்தோடு முதிர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவற்றை வாய்மொழிப்பாடல்களின் ஓரிரு கூறுகள் இருப்பதால் வீரயுகப்பாடல்கள் என அடையாளம் காண்பது தவறாகும். தமிழ்ச் சமுதாய, இலக்கிய வரலாற்றில் வீரயுகம் என்பது சங்க இலக்கியங்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்க வேண்டும் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களும் ஏனைய சங்க இலக்கியங்களும் காட்டும் பண்பாட்டு முதிர்ச்சியிலிருந்து அறியலாம்” என்கிறார்
0 Comments