மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது.இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.
மாதுளையின் வேறு பெயா்கள்
மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.
மாதுளை (Pomegranate, Punica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
மாதுளையின் வகைகள்
- ஆலந்தி
- தோல்கா
- காபுல்
- மஸ்கட் ரெட்
- ஸ்பேனிஷ் ரூபி
- வெள்ளோடு
- பிடானா
- கண்டதாரி
மாதுளம் பழத் தோலில் உள்ள மருத்துவ குணங்கள்
• மாதுளம் பழத்தை போலவே இதன் தோலும் அதிக
பலன் கொண்டது. மாதுளம் பழத்தோல் பொடியை
நீருடன் கலந்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
• மாதுளம் பழ தோல் பொடியை சிறிது வெந்நீரில் கலந்து
குடித்து வந்தால் சர்க்கரை நோய், புற்றுநோய், கல்லீரல்,
இதயம் மற்றும் மூளை பாதுகாக்கிறது. அ
து ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது.
• மாதுளை பழத் தோலை பொடி செய்து அதனுடன்
சம அளவு பயத்தம்பருப்பை கலந்து உடலில் பூசிக்கொண்டால்
வியர்வை துர்நாற்றம் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியையும்
ஏற்படுத்தும்.
• மாதுளை பழத் தோலின் பொடியுடன் பால், ரோஸ் வாட்டர்
கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட முகமானது
புத்துணர்ச்சியோடு இருக்கும்.
• பல்வேறு தொற்றுக்களை போக்குவதிலும்,
கேடு விளைவிக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை
நம்மை அண்டாமல் பாதுகாக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
• மாதுளை பழத்தோலின் பொடியுடன் தண்ணீர் விட்டு குழைத்து
சருமம் தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்தால்
முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகள் முடி உதிர்தல் நீங்கும்.
• மாதுளை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் காக்கும்
எலும்பை வலுவாக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை
பராமரிக்கவும் உயிர் அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்,
மாதுளை பழம் பயன்படுகிறது.
0 Comments